ஐடி பூங்கா: சிறிய நிறுவனங்களுக்கு முன்னுரிமை- அமைச்சர் பூங்கோதை
திருச்சி: தமிழகத்தில் வேலை வாயப்பை பெருக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் சிறிய நிறுவனங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பூங்கோதை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பூங்கோதை திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவது குறித்து மாணவர்களிடம் எடுத்துக் கூறும் நோக்கில் எல்காட் நிறுவனமும், நாஸ்காம் நிறுவனமும் இணைந்து எம்பவர் ஐ.டி என்ற நிகழ்ச்சி நடத்தி வருகின்றது.
கடந்த ஆண்டு இந்த நிகழ்ச்சி நெல்லையில் நடத்தியது. இதில் 17 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்தனர்.
இதன் அடுத்த கட்டமாக தற்போது, திருச்சியில் கேர் கல்வி வளாகத்தில் டிசம்பர் 4 ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் இருந்து 106 கல்லூரிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் நானும், தமிழக அமைச்சர்கள் கே.என். நேரு, செல்வராஜ், கனிமொழி எம்.பி, தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலர் டேவிதார் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
இதனையடுத்து அடுத்த ஆண்டு மதுரையில், எம்பவர் ஐ.டி நிகழ்ச்சி நடத்தப்படும். இதனால் தமிழத்தில் உள்ள ஆறு இரண்டாம் நிலை நகரங்கள் வளர்ச்சி பெறுவதோடு, தமிழகமும் முன்னேற்றமடையும்.
திருச்சியில் தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கான அடிப்படை உள்கட்டமைப்பு பணிகள் மூன்று மாதத்தில் நிறைவடையும். இதில், ஒன்பது நிறுவனங்கள் இடம் பெறுகின்றன.
மதுரையில் எச்.சி.எல் உள்ளிட்ட ஏழு நிறுவனங்களும், நெல்லையில் இரண்டு நிறுவனங்களும் இடம் பெற முன்வந்துள்ளன.
வேலைவாய்ப்பை உருவாக்குவது தான் முக்கிய நோக்கம் என்பதால் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் சிறிய நிறுவனங்களும் வந்தால் வரவேற்போம் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications