பென்னாகரம் இடைத் தேர்தல் - திமுக தேர்தல் பணிக் குழு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பென்னாரம் தொகுதி திமுக தேர்தல் பணிக்குழுவை அக்கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நடைபெற உள்ள பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆக்கப்பூர்வமான தேர்தல் பணியாற்றுவதற்கு பின்வரும் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள், கழக உடன் பிறப்புகள் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தர்மபுரி தெற்கு மாவட்டம், கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், வேலூர், விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம், தென்சென்னை, வடசென்னை ஆகிய மாவட்டங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications