ரூ.666க்கு 33 மளிகை பொருட்கள்... கூட்டுறவுக் கடைகளில் சிறப்புத் திட்டம்!

பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
இதன்படி, வீட்டுக்குத் தேவையான அனைத்து மளிகைப் பொருள்களும் அடங்கிய எகானமி பாக்கெட் ரூ 666-க்கு தரப்படும். இதில் மஞ்சள் 50 கிராம், சீரகம் 50 கிராம், கடுகு, உடைத்த பருப்பு, சோம்பு, வெந்தயம் ஆகிய தலா 50 கிராமும், மிளகு 25 கிராமும் வைக்கப்பட்டிருக்கும்.
இவை தவிர,
உப்பு
புளி
குண்டு மிளகாய்
மல்லி தலா 500 கிராம்
கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
துவரம் பருப்பு
பாசிப்பருப்பு தலா 1/2 கிலோ
வறு கடலை
பச்சைப்பட்டாணி
கொண்டை கடலை -தலா 200 கிராம்
அப்பளம் ஒரு கட்டு
அரிசி வடகம் ஒரு பாக்கெட்டு
பினாயில் 1 பாட்டில்
கிளினிக் ஆசிட் 1 பாட்டில்
ரின் சோப்பு 5 (100 கிராம்)
ஷாம்பு- 5 பாக்கெட்
ஹமாம் அல்லது லக்ஸ் சோப்பு 2 (100கிராம்)
பல் பேஸ்ட் 80 கிராம்
சமையல் எண்ணை 1 லிட்டர் பாக்கெட் இரண்டு
இதயம் நல்லெண்ணை 200 மில்லி
பாராசூட் தேங்காய் எண்ணை-100 மில்லி
சபினா 450 கிராம் பாக்கெட்
பாத்திரம் தேய்க்க கூடிய பிரஷ் 1
தீப்பெட்டி- 1 போன்ற பொருள்களும் தரப்படும்.
வெளி மார்க்கெட்டில் இதன் மதிப்பு ரூ.800.
இதைத் தவிர ஸ்பெஷல் பேக்கேஜ் எனும் பாக்கெட்டும் தரப்படும். இதன் விலை ரூ 999.
இதில் 46 மளிகை பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேற்கண்ட 33 பொருட்களுடன் மேலும் 13 வகை பொருட்கள் சேர்த்து வழங்கப்படும். இதில்,
பூஸ்ட் அல்லது ஹார்லிக்ஸ் 1/2 கிலோ பாக்கெட்
முந்திரி, திராட்சை, சேமியா, டீத்தூள் 200 கிராம்
ஆட்டா, மைதா, ரவா தலா 1/2 கிலோ
பேரிச்சம்பழம் 100 கிராம்
ஹேர் ஆயில் 100 கிராம்
டூத் பிரஸ்-1
சமையல் அறையில் பயன்படும் சிறிய துண்டு ஆகியவை அடங்கும்.
இதன் வெளிமார்க்கெட் விலை ரூ.1200 ஆகும்.
அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தைச் சமாளிப்பதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாகவும், டி.யு.சி.எஸ். சொந்தமான 220 ரேஷன் கடைகளிலும் 8 சுயசேவை பிரிவுகளிலும், 8 மண்ணெண்ணை வழங்கும் நிலையங்களிலுமாக, சென்னையில் மட்டும் மொத்தம் 236 இடங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications