'ஜெயராம்':மறப்போம்,மன்னிப்போம்-கருணாநிதி
Subscribe to Oneindia Tamil

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மலையாள நடிகர் ஜெயராமின் வீடு நேற்று இரவு தாக்குதலுக்கு உள்ளானது.வீட்டில் இருந்த ஷீல்டுகள் எரிந்து சாம்பலாகின.
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி,
நடிகர் ஜெயராம் தமிழ் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருந்தால் அது கண்டனத்துக்கு உரியதுதான்.ஆனால் அவர், அதற்காக வெளிப்படையாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொண்ட காரணத்தால் மறப்போம்,மன்னிப்போம் என்ற அண்ணாவின் பொன்மொழியை கடைபிடித்து இந்த பிரச்சனையை இத்துடன் விட்டுவிடுவதுதான் நல்லது
அதே நேரத்தில் சட்டத்தை கையிலே எடுத்துக்கொண்டு அவருடைய வீட்டில் புகுந்து பெண்களை பயமுறுத்தியும்,வீட்டுக்கு தீயிட்டும் நடைபெற்ற செயல்களை காவல் துறை வேடிக்கை பார்க்க முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications