தங்கம்-ஒரே நாளில் பவுனுக்கு ரூ.424 குறைந்தது!

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக கணிக்க முடியாத அளவுக்கு தாறுமாறாக உயர்வதும் வீழ்வதுமாக உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு வரை காலையில் குறைந்த அளவில் விலை உயரும் தங்கம், மாலையில் அதிக அளவில் உயர்ந்து வருவது அன்றாட கதையாக இருந்து வந்தது. இதனால் தவரன் ரூ 8000க்கும் குறைவாக இருந்த தங்கம் விலை ரூ 13 ஆயிரத்தைத் தொட்டு அதிர்ச்சி தந்தது.
ஆனால் இப்போது தங்கம் விலை கணிசமாக குறையத் துவங்கியுள்ளது.
குறிப்பாக கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலை குறைய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.1,554-க்கும், பவுன் 12 ஆயிரத்து 432-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் நேற்று தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியடைந்தது.
ஒரு கிராம் ரூ.1,501-க்கும், ஒரு பவுன் 12 ஆயிரத்து 8 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.424 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் பவுனுக்கு 804 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீழ்ச்சி நகை வாங்குவோர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், நேற்று பெரும்பாலான நகை கடைகளில் வழக்கத்தை விட அதிகமான கூட்டம் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications