மகளிர் சுய உதவிக் குழுத் தலைவியைக் கொன்ற கள்ளக்காதலர் கைது
திருநெல்வேலி: நெல்லை அருகே மகளிர் சுய உதவிக் குழு தலைவி குத்தி கொலை செய்யப்பட்டார். கள்ளக்காதல் காரணமாக இந்தக் கொலை நடந்தது. கொலையாளியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புளியங்குடி-மதுரை ரோடு கொச்சேரி கால்வாய் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கழுதறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
புளியங்குடி போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் இறந்து கிடந்தது வாசுதேவநல்லூர் அருகே ராமநாதபுரம் பாலகணேசன் மனைவி பரமேஸ்வரி என்பது தெரிய வந்தது. கணவர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வந்த பரமேஸ்வரி அங்குள்ள மகளிர் சுய உதவி குழுவில் துணை தலைவியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு புளியங்குடி வந்த பரமேஸ்வரி கொச்சேரி கால்வாய் பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கடந்த வாரம் அவரது செல்போன் தொலைந்து விட்டதாக கூறி மகளிர் குழுவை சேர்ந்த ஒருவர் இரவல் செல்போன் வாஙகியுள்ளார். போலீசார் அந்த செல்போனை கைப்பற்றி துப்பு துலக்கி வந்தனர்.
செல்போனில் கடைசியாக பதிவாகியிருந்த செல்போன் யாருடையது என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில் கேரளா மாநிலத்தில் சிம்கார்டு வாங்கி பயன்படுத்தியது தெரிய வந்தது.
அந்த நம்பருக்கு உரியவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தியதில் புளியங்குடி மதுரை ரோட்டில் உள்ள சிந்தாமணியை சேர்ந்த சுப்பிரமணியன மகன் கண்ணன் என தெரிய வந்தது.
இதையடுத்து புளியங்குடி இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் கேரளா மாநிலம் கொல்லம் அருகேயுள்ள ஆற்றின்கல் பகுதியில் இருந்த கண்ணனை பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சிப்ஸ் வியாபாரம் செய்து வருவதாகவும், புளியங்குடி வரும்போது பரமேஸ்வரியுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறினார்.
சம்பவத்தன்று கண்ணனிடம் செல்போனில் பேசிய பரமேஸ்வரி உன்னை சந்திக்க வேண்டும். எனக்கு அவசரமாக ரூ.40 ஆயிரம் பணம் வேண்டும் என்று கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார்.
இதையடுத்து புளியங்குடி வந்த கண்ணன் கடந்த 19ம் தேதி இரவு பரமேஸ்வரியை அழைத்து கொண்டு காரில் குற்றாலம் சென்றார். அங்கு உல்லாசமாக இருந்து வி்ட்டு நள்ளிரவில் புளியங்குடி திரும்பினர்.
மதுரை ரோட்டில் உள்ள கொச்சேரி கால்வாய் அமைந்துள்ள குறுக்கு பாதையில் செல்லும்போது திடீரென காரை நிறுத்திய கண்ணன் சிறுநீர் கழிக்க செல்வதாக கூறினார். பரமேஸ்வரியும் காரை விட்டு ஒதுங்கினார்.
அப்போது பரமேஸ்வரி தன்னிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்வார் என நினைத்த கண்ணன் வாழைக்காய் வெட்ட பயன்படுத்தகூடிய கத்தியை எடுத்து பரமேஸ்வரியின் கழுத்தை அறுத்தார்.
பின்னர் அவரை கீழே தள்ளி 10 இடங்களில் சாரமரியாக குத்திக் கொன்றார். பின்னர் அவரது உடலை இழுத்து கால்வாயில் வீசிவிட்டு சென்று தலைமறைவாகி விட்டார் என்று தெரிய வந்தது. இதையடுத்து கண்ணனை போலீசார் கைது செய்தனர்.
பரமேஸ்வரிக்கு கண்ணன் தவிர வேறு பல ஆண்களுடனும தொடர்பு இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications