சென்னை அருகே திமுக செயலாளர் வெட்டிப் படுகொலை
சென்னை: சென்னை அருகே திமுக வட்டச் செயலாளர் தொழில் போட்டி காரணமாக கொல்லப்பட்டார்.
சென்னை அம்பத்தூர் அருகே அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜான்சன். 44 வயதான இவர் திமுக வட்டச் செயலாளராக இருந்து வந்தார். கூடவே ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டிருந்தார்.
நில விற்பனை தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் இவருக்கு முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு ஜான்சன் தனது தம்பி பீட்டருடன் பைக்கில் போய்க் கொண்டிருந்தார்.
அப்போது ஒரு கும்பல் அங்கு வந்து ஜான்சனை மட்டும் அழைத்துச் சென்றது. அங்கு வைத்து இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. இது பின்னர் கடும் சண்டையாக மாறியது. இதில் ஜான்சனை சரமாரியாக அந்தக் கும்பல் குத்திக் கொலை செய்து விட்டுத் தப்பியது.
இதுகுறித்து பீட்டர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
