மாயாவதிக்கு ரூ.1 கோடி நோட்டு மாலை!

பகுஜன் சமாஜ் கட்சியின் 25வது ஆண்டு தினம் நேற்று லக்னோவில் மகா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மகா பேரணியும் நடத்தப்பட்டது.
இதை விட முக்கியமாக நிகழ்ச்சியில் பிரமாண்டமான மாலை ஒன்றை பகுஜன் கட்சியினர் மாயாவுக்கு அணிவித்தனர். படு வித்தியாசமாக இருந்த அந்த மாலை பூக்களால் செய்யப்பட்டதல்ல. மாறாக ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மடித்தும், மடக்கியும், சுருட்டியும் வைத்து மாலையாக கோர்த்திருந்தனர்.
கிட்டத்தட்ட ரூ. 1 கோடி அளவிலான ரூபாய் நோட்டுக்கள் இதில் இடம் பெற்றிருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த மகா ஆடம்பர நிகழ்ச்சி உ.பி எதிர்க்கட்சிகளை உசுப்பி விட்டுள்ளது.
வெள்ளி விழா நிகழ்ச்சிக்காக மக்கள் வரிப்பணத்திலிருந்து ரூ. 200 கோடி வரை மாயாவதி கட்சியினர் வாரியிறைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் பாய்ந்துள்ளன.
இதுகுறித்து சமாஜ்வாடி கட்சித் தலைவர் சிவபால் சிங் யாதவ் கூறுகையில், இந்த ஆடம்பர நிகழ்ச்சி குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மேலும், மிகப் பெரிய ரூபாய் நோட்டு மாலையையும் பகிரங்கமாக மாயாவதிக்கு அணிவித்துள்ளனர். இதுகுறித்தும் விரிவாக விசாரிக்க வேண்டும் என்றார்.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்று லோக்சபாவில் இதுகுறித்து பிரச்சினை எழுப்பினார். அவர் கூறுகையில், பரேலி ஒரு பக்கம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஆனால் மாயாவதி அரசோ மக்கள் பணத்திலிருந்து ரூ. 200 கோடியை வாரியிறைத்து ஆடம்பர விழாவை நடத்திக் கொண்டிருக்கிறது என்றார்.
இதேபோல பாஜக, காங்கிரஸ் கட்சியினரும் மாயாவதி கட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். பரேலிக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications