முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இன்று அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இது வழக்கமான பரிசோதனைதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறப்பு ட்யூட்டி டாக்டர் எல்.ஆர்.அகுஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், 86 வயதாகும் வாஜ்பாய்க்கு வயோதிகம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளன. அவரை வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக எய்ம்ஸ் கொண்டு வந்தனர்.
அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்று தெரிவித்துள்ளார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது முழங்கால் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications