For Daily Alerts
Just In
அமெரிக்கா: கலிபோர்னியாவில் நிலநடுக்கம்
சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவில் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.7 புள்ளிகளாகப் பதிவாகி உள்ளது.
மெக்சிகோ எல்லையில் ஓகோடிலோ என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தை சான்டியாகோ உள்ளிட்ட பல இடங்களிலும் உணர முடிந்தது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் தெருக்களுக்கு ஓடிவந்தனர்.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் பற்றி எதுவும் தெரியவில்லை.
Comments
Story first published: Tuesday, June 15, 2010, 15:52 [IST]