வனத்துறை அதிகாரி மீது மனைவி 'ஹோமோ செக்ஸ்' புகார்
மதுரை: கார் டிரைவரால் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட வனத்துறை அதிகாரியின் மனைவி, நீதிமன்றத்தில் ஆஜராகி தனது கணவர் மீது 'ஹோமோ செக்ஸ்' புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்ட வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் சீனிவாச ரெட்டி. இவரது மனைவி லாவண்யா (32). இந்த தம்பதிக்கு மாதவ், பிரியங்கா என்று 2 குழந்தைகள் உள்ளனர்.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்த லாவண்யாவை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வனத்துறையில் பணியாற்றி வரும் கார் டிரைவர் சாகுல் ஹமீது கடத்தி சென்று விட்டதாக சீனிவாச ரெட்டி தேனி போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சாகுல் ஹமீதையும், லாவண்யாவையும் தேடி வந்தனர். இந் நிலையில் சாகுல் ஹமீது முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி மாலா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சீனிவாச ரெட்டியின் மனைவி லாவண்யாவும் நேரில் ஆஜராகி நீதிபதியிடம் ஒரு மனு அளித்தார். அந்த மனுவில்,
எனது கணவர் சீனிவாச ரெட்டியின் செயல்பாடுகள் எனக்கு பிடிக்கவில்லை. அவர் ஒரு 'ஹோமோ செக்ஸ்' பிரியர். பல ஆண்களுடன் அவர் ஹோமோ தொடர்பு வைத்துள்ளார். அது தொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்தும் எந்தவித பலனும் இல்லை.
இதனால் எங்களுக்குள் சில ஆண்டுகளாகவே சுமூகமான உறவு இல்லை. எனது சொந்த ஊர் ஆந்திரா மாநிலத்தில் இருப்பதால் தேனியில் எனக்கு உறவினர்களோ, நண்பர்களோ யாரும் இல்லை.
கார் டிரைவர் சாகுலிடம் மட்டும் நான் நட்புடன் பேசி வந்தேன். இது டிக்காத எனது கணவர் என்னை தினமும் அடித்து உதைக்கிறார். கொலை மிரட்டலும் விடுத்தார்.
என்னை சாகுல் ஹமீது கடத்தவில்லை. அதனால் சாகுல் அமீதுக்கு எதிரான புகாரை விசாரிக்க வேண்டியதில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் லாவண்யா கூறியிருந்தார்.
மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி மாலா கடத்தல் புகார் கூறப்பட்ட சாகுல் ஹமீதுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கினார். அவர் அடுத்த 15 நாட்களுக்கு தேனி நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications