For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்வரின் முதன்மை செயலாளராக அலாவுதீன் நியமனம்

By Muthukrishnan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தி்ல் 4 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வரின் முதன்மை செயலாளராக அலாவுதீன் நியமி்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு:

தமிழக அரசு முதன்மை செயலாளரும், நிலச்சீர்திருத்தத் துறை ஆணையரும், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு தனி அலுவலரும், தமிழ்நாடு சிறுதொழில் நிறுவன (டான்சி) தலைவராகவும் (பொறுப்பு) இருக்கும் கே.அலாவுதீன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் முதல்வரின் முதன்மை செயலாளராகவும் (கண்காணிப்பு) அவர் பொறுப்பு (டாக்டர் டி.வி.சோமநாதனுக்கு பதிலாக) வகிப்பார்.

டாக்டர் டி.வி. சோமநாதன், சிறப்பு முயற்சிகள் துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குனராகவும் செயல்படுவார்.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மை செயலாளர் கே.அஷோக் வர்தன் ஷெட்டி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத் துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக (சிப்காட்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

பார்வையற்ற மாணவர்களுக்கு பரிசு தொகை அதிகரிப்பு:

இந் நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்துறை செயலாளர் ஜவஹர் வெளியிட்டுள்ள உத்தரவில், 2009-2010ம் கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 படித்து மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் 3 இடங்களைப் பிடித்த பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ- மாணவிகளுக்கு பரிசுத் தொகையை 3 மடங்கு உயர்த்தி வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

இதன்படி, 10ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறுவோருக்கு ரூ.12 ஆயிரமும், 2ம் இடம் பிடிப்பவருக்கு ரூ.9 ஆயிரமும், 3ம் இடம் பெறுபவருக்கு ரூ.6 ஆயிரமும் வழங்கப்படும்.

அதேபோல், மாவட்ட அளவில் முதல் இடம் பெறும் மாணவருக்கு ரூ.6 ஆயிரமும், 2ம் இடம் பெறுபவருக்கு ரூ.4,500-ம், 3ம் இடம் பிடிப்பவருக்கு ரூ.3 ஆயிரமும் அளிக்கப்படும்.

பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெறுவோருக்கு ரூ.18 ஆயிரமும், 2ம் இடம் பிடிப்பவருக்கு ரூ.12 ஆயிரமும், 3ம் இடம் பெறுபவருக்கு ரூ.9 ஆயிரமும் வழங்கப்படும்.

இதேபோல், மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.12 ஆயிரமும், 2ம் இடம் பெறுபவருக்கு ரூ.7,500ம், 3ம் இடம் பிடிப்பவருக்கு ரூ.4,500ம் அளிக்கப்படும்.

மேலும், மேற்படிப்பை தொடர கல்விக் கட்டணம், பிரெய்லி பாடப் புத்தகங்கள் வழங்க கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவற்றுக்காக நடப்பு ஆண்டில் ரூ.41 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X