பிரதமர் பதவிக்கு எனது கணவர் பொருத்தமானவர் அல்ல-ஜப்பான் பிரமதரின் மனைவி

Posted By:
Subscribe to Oneindia Tamil
Naoto with Wife Nobuko
டோக்கியோ: எனது கணவருக்கு பிரதம் பதவி சரிப்பட்டு வராது. அவர் இதற்குப் பொருத்தமானவர் அல்ல. ஏதோ அதிர்ஷ்டத்தால் இந்தப் பதவி தேடி வந்துள்ளது என்று ஜப்பான் பிரதமர் நவோட்டா கானின் மனைவி நொபுகா கான் கூறியுள்ளது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நொபுகா கான் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். “You are Prime Minister, So What Will Change in Japan?" என்ற பெயரிலான அந்தப் புத்தகம் சமீபத்தில் வெளியானது. அதில் தனது கணவர் பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் அல்ல என்று நொபுகா கான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அதிர்ஷ்டத்தின் காரணமாக எனது கணவருக்குப் பிரதமர் பதவி கிடைத்துள்ளது. மற்றபடி அப்பதவிக்கு அவர் தகுதியானவர் கிடையாது என்று கூறியுள்ளார்.

இந்தப் புத்தகத்தால் நவோட்டா கான் அப்செட்டாகியுள்ளார். இது எனக்கு கஷ்டமாக உள்ளது. இதைப் படிக்கவே பயமாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார் நவோட்டா.

பிரதமரானதும் ஜப்பானில் நடந்த மேல்சபைத்தேர்தலில் ஆளுங்கட்சி பெரும் தோல்வியைத் தழுவியது. இதனால் மக்களின் நம்பிக்கையைப் பெற நவோட்டா கடுமையாக போராடி வருகிறார். இந்த நிலையில், அவரது மனைவியே அதற்கெல்லாம் இவர் சரிப்பட்டு வர மாட்டார் என்று கூறியுள்ளதால், எதுக்காக நான் சரிப்பட்டு வர மாட்டேன் என்று புலம்ப வைத்து விட்டார் நவோட்டாவை அவரது மனைவி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...