ஹாக்கி பயிற்சியாளர் மீதான செக்ஸ் புகார் விசாரண-விளையாட்டு அமைச்சகம் அதிருப்தி

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் கெளசிக், வீடியோகிராபர் பசவராஜ் உள்ளிட்டோர் வீராங்கனைகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததாக ரஞ்சிதா தேவி என்ற வீராங்கனை தலைமையில் 30க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பரபரப்பு புகார் கூறியிருந்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த நான்கு பேர் கொண்ட கமிட்டியை ஹாக்கி இந்தியா அமைத்தது. இந்த விசாரணைக்கு முன்னதாகவே பசவராஜ் நீக்கப்பட்டார். கெளசிக் தானாக பதவி விலகி விட்டார்.
விசாரணைக் கமிட்டியின் விசாரணையில் கெளசிக் மீது தவறு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஹாக்கி இந்தியாவிடம் விசாரணைக் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் ஹாக்கி இந்தியா, இந்தப் பரிந்துரையை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன்னிஷ்டப்படி ஒரு பரிந்துரையை வெளியிட்டுள்ளது. இதனால் விசாரணைக் கமிட்டி உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல ஹாக்கி இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து மத்திய விளையாட்டு அமைச்சகமும் அதிருப்தி அடைந்துள்ளதாம். ஹாக்கி இந்தியா அமைப்பே ஒரு இடைக்கால அமைப்பு என்பதால் அதன் முடிவுகள் சட்டப்பூர்வமானதாக இருக்காது என்று விளையாட்டு அமைச்சகம் கூறியுள்ளது.
எனவே கெளசிக் தொடர்பாக ஹாக்கி இந்தியா அனுப்பும் அறிக்கைக்குப் பின்னர் தனியாக ஒரு உயர் மட்ட அளவிலான விசாரணைக்கு விளையாட்டு அமைச்சகம் உத்தரவிடவுள்ளதாம்.
ரஞ்சிதா தேவியின் புகார்கள் சத்தியமானவை
இதற்கிடையே, வீராங்கனை ரஞ்சிதா தேவி கூறியுள்ள செக்ஸ் டார்ச்சர் புகார்கள் நம்பகமானவை, உண்மையானவை என்று ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் நரீந்தர் பத்ரா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ரஞ்சிதாவின் புகாரை நாங்கள் தீவிரமாக கருத்தில் கொண்டுள்ளோம்.அவருடைய எழுத்துப்பூர்வமான பதில்களும், குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களும் நம்பகமானவை, உண்மையானவை.
எங்களது விசாரணை அறிக்கையின் நகலை போலீஸ் ஆணையருக்கு மேல் விசாரணைக்காக அனுப்பியுள்ளோம். மத்திய விளையாட்டு அமைச்சக செயலாளருக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.
இதற்கு மேல் இந்த விவகாரத்தில் எங்களால் செயல்பட முடியாது. கெளசிக் உள்ளிட்டோர் மீது மேல் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் விளையாட்டு அமைச்சகத்திற்கே உள்ளது. மேலும் டெல்லி போலீஸ் ஆணையர் இந்த விவகாரத்தை சட்டப்பூர்வமாக கையாளவும் பரிந்துரைத்துள்ளோம்.
உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என கமிஷனரைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.
எதிர்காலத்தில் கெளசிக், பசவராஜ் உள்ளிட்டோரின் சேவையை நாங்கள் பயன்படுத்த மாட்டோம். அவர்கள் எங்களுக்குத் தேவையில்லை.
உதவிப் பயிற்சியாளர்கள் இருவர் புகார்கள் தொடர்பாக எழுத்துப்பூர்வமான பதிலை அளித்துள்ளனர். அதில் ஒருவர், விபச்சாரப் பெண்களுடன் இருப்பவர் பசவராஜ்தான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மகளிர் அணி கேப்டனுடன் நான் பேசினேன். அதற்கு அவர் ரஞ்சிதாவுக்கு அனைத்து வீராங்கனைகளும் ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார் என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications