For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விரைவில் நித்தியானந்தா ஆசிரமத்திற்கு ரஞ்சிதா வருகை?-சிஷ்யர்கள் சூசக தகவல்

Google Oneindia Tamil News

Nithyananda with Actress Ranjitha
சென்னை: நடிகை ரஞ்சிதா மீண்டும் ஆசிரமத்திற்கு வந்தால் அவரை வரவேற்போம், மனதார அனுமதிப்போம் என்று கூறியுள்ளனர் நித்தியானந்தாவின் சீடகோடிகள். இதன் மூலம் அவர் விரைவில் மறைவிடத்திலிருந்து வெளியேறி பகிரங்கமாக நித்தியானந்தாவுடன் இணைவார் என்று தெரிகிறது.

படுக்கை அறையில் செய்யும் அத்தனை அந்தரங்க காரியங்களையும் செய்து அது வீடியோவில் சிக்கி, தப்பி ஓடி தலைமறைவானவர்கள் நடிகை ரஞ்சிதாவும், நித்தியானந்தாவும். பின்னர் இமாச்சலப் பிரதேசத்தில் பதுங்கியிருந்த நித்தியானந்தாவை கர்நாடக போலீஸார் பிடித்துக் கொண்டு வந்து சிறையில் அடைத்தனர். தற்போது பெயிலில் வெளியில் உள்ளார் நித்தியானந்தா. வழக்கம் போலஊருக்கு அறிவுரை கூறும் வேலைகளையும் ஆரம்பித்து விட்டார். அதற்கும் மக்கள் பெருமளவில் போக ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் ரஞ்சிதா மட்டும் இதுவரை வெளியுலகுக்குத் தலை காட்டாமல் பதுங்கிப் பதுங்கி வாழ்ந்து வருகிறார். ஆனால் விரைவில் அவர் வெளியில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நித்தியானந்தா சீடர்கள் சூசகமாக தெரிவித்தனர்.

அகில இந்திய தியான முகாம்களின் மகா ஆச்சாரியார் எனக் கூறப்படும் ஸ்ரீநித்ய ஞானானந்தா, தமிழ்நாடு நித்யானந்த தியானபீட செயல் தலைவர் ஸ்ரீநித்ய சர்வானந்தா ஆகியோர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு சரமாரியான கேள்விகளுக்கு இவர்களால் சரியான பதிலைத் தர முடியவில்லை. எதற்கெடுத்தாலும் வழக்கு கோர்ட்டில் உள்ளதால் அதுகுறித்துக் கூற முடியாது என்று நித்தியானந்தா போலவே சிரித்தபடி கூறிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கடந்த 25-ந் தேதி பெங்களூர் ஆசிரமத்தில் நடந்த குரு பூர்ணிமா விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நித்யானந்தாவிடம் ஆசி பெற்றனர். கடந்த 4 மாதங்களாக நித்யானந்த தியான பீடமும், நித்யானந்தாவும் உண்மைக்கு புறம்பான முறையில் விமர்சிக்கப்பட்டுள்ளனர்.

அகிம்சையை கடைபிடியுங்கள் அமைதியாக இருங்கள், தர்மம் வென்றே தீரும் என்று எங்கள் நித்யானந்தா சொன்ன ஒரு வார்த்தைக்காக கடந்த காலக்கட்டங்களில் அமைதியாக இருந்தோம். ஆனால், தனியார் டி.வி. ஒன்றில் எங்கள் குருநாதர் மனம் புண்படும் வகையில் போலி சாமியார் என்று செய்தி ஒளிபரப்பானது.

குரு பூர்ணிமா விழாவில் கணவர்-குழந்தையோடு பங்கேற்ற எங்களது பக்தர் டிவி நடிகை மாளவிகாவை கொச்சைப்படுத்தி செய்தி ஒளிபரப்பினார்கள். இதை கண்டிக்கிறோம்.

எங்களை காட்சி பொருளாகவும், வியாபார பொருளாகவும் ஆக்கிவிட வேண்டாம். நித்யானந்தாவை பற்றி கூறும் அவதூறுகள் எங்களுடைய வாழ்க்கையை நேரடியாக பாதிக்கின்றன. நித்யானந்தா மீது அவதூறு செய்திகள் பரப்பியோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். நடவடிக்கையும் எடுக்கப் போகிறோம். இதற்காக சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து வருகிறோம் என்றனர்.

நித்யானந்தா-நடிகை ரஞ்சிதாவுடன் ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானதே? என்ற கேள்விக்கு நாங்கள் எப்போதும் நேர்மை, நியாயம், தர்மம், கட்டுப்பாடு ஆகியவற்றைத்தான் போதிக்கிறோம். தமிழ்க் கலாச்சாரத்திற்காக நாங்கள் நிறைய செய்துள்ளோம் என்று வேறு பதிலை தெரிவித்தனர்.

விடாத நிருபர்கள், ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் இருப்பதுதான் தமிழ் கலாசாரத்தையும், இந்து தர்மத்தையும் காப்பாற்றும் செயலா? என்று கிடுக்கிப் பிடி போட்டபோது, அந்தக் காட்சி முழுக்க முழுக்க பொய்யானது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே, அதுபற்றி விரிவாக பேச விரும்பவில்லை என்று கட் செய்தனர்.

அப்படியும் விடாத செய்தியாளர்கள், வீடியோ காட்சி பொய்யானது என்றால் நித்யானந்தா ஏன் தலைமறைவாக வேண்டும்? என்று கேட்டபோது, அப்போது எங்களது நிலைமை முள்ளில் விழுந்த சேலை போல இருந்தது. அதை பத்திரமாக எடுக்க வேண்டிய கடமையில் நாங்கள் இருந்தோம்.

இருந்த போதிலும் தன்னுடைய நிலைமையை விளக்கி நித்யானந்தா பேசி அனுப்பிய 2 வீடியோ காட்சிகள் பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சேவை செய்தால் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இதை பல தலைவர்கள் அனுபவித்து இருக்கிறார்கள். அந்த நிலையை நித்யானந்தா அனுபவிக்கிறார் என்றனர்.

சரி ரஞ்சிதா கடைசியாக எப்போது ஆசிரமத்திற்கு வந்தார் என்ற கேள்விக்கு, நடிகை ரஞ்சிதாவை கடைசியாக கடந்த ஜனவரி மாதம் ஆசிரமத்தில் பார்த்து உள்ளோம் என்றனர்.

மீண்டும் வந்தால் சேர்ப்பீர்களா, இப்போது அவர் எங்கிருக்கிறார் என்ற கேள்விக்கு, ரஞ்சிதா தற்போது எங்கள் ஆசிரமத்தில் இல்லை. சிறந்த பக்தையான அவர் மீண்டும் வந்தால் அனுமதிப்போம், வரவேற்போம். மடத்தின் காவலாளியாக நாங்கள் இருந்தால் அவரை எந்தவித மறுப்பும் சொல்லாமல் அனுமதித்து விடுவோம் என்றனர்.

செய்தியாளர் சந்திப்பின்போது குருநாதன் என்பவரும் இருந்தார். இவர் முன்னாள் எம்.எல்.ஏவாம். தியான பீடத்தின் மக்கள் தொடர்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X