For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோத்ராவுக்குப் பிந்தைய கலவர வழக்கு-மோடி எதிர்ப்பாளர், 2 போலீஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

Gordhan Zadaphia
அகமதாபாத்: நரேந்திர மோடி அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இடம் பெற்று பின்னர் பாஜகவிலிருந்து விலகி தற்போது மோடிக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருபவரான கோர்தான் ஜடாபியா மற்றும் 2 போலீஸ் அதிகாரிகளை கோத்ராவுக்குப் பிந்தைய முஸ்லீம்களுக்கு எதிரான கலவர வழக்கில் சுப்ரீம் கோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) சேர்த்துள்ளது.

இவர்கள் மீது பிரிவினைவாதத்துடன் செயல்பட்டதாக எஸ்ஐடி குற்றம் சாட்டியுள்ளது. முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான இந்த எஸ்ஐடி, மூன்று பேரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும், கிரிமினல் நோக்குடன் செயல்பட்டதாகவும் கூறியுள்ளது.

2002ம் ஆண்டு கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்டது. இதையடுத்து குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக பெரும் கலவரத்தில் சங் பரிவார் அமைப்புகள் இறங்கின. இதில் நூற்றுக்கணக்கானோர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.

இந்த கலவர வழக்கை விசாரிக்க கடந்த 2008ம் ஆண்டு எஸ்ஐடியை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் அதற்குப் பிந்தைய கலவர வழக்கை எஸ்ஐடி விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் தற்போது கோர்தான் மற்றும் ஓய்வு பெற்ற கூடுதல் டிஜிபி எம்.கே.டான்டன், ஐஜி பி.பி.கோன்டியா ஆகியோரை சேர்த்துள்ளது எஸ்ஐடி. மூழருக்கு எதிரான ஆதாரங்களையும் எஸ்ஐடி சேகரித்து விட்டது.

இந்தத் தகவல்களை சில நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த காலாண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது எஸ்ஐடி.

எஸ்ஐடி உறுப்பினரான ஏ.கே.மல்ஹோத்ரா கையெழுத்திட்ட இந்த அறிக்கையில், ஜடாபியாவுக்கு குற்றச் செயலில் தொடர்புடையதாக கூறியுள்ல எஸ்ஐடி, குற்றம் நடந்ததைக் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்ததாக மற்ற இரு போலீஸ் அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டியுள்ளது.

கலவரத்தையும், வன்முறையையும் இரு அதிகாரிகளும் அடக்கத் தவறி விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

2002ம் ஆண்டு இணை காவல்துறை ஆணையராக இருந்தார் டான்டன். அதேசமயம், துணை கமிஷனராக இருந்தவர் கோன்டியா. அகமதாபாத் நகரில் இருவரும் பணிகளில் இருந்தனற். இவர்களது எல்லைக்குள் இருந்த நரோடா பாடியா பகுதியி 95 பேரும், குல்பர்க் சொசைட்டியில் 69 பேரும் உயிரோடும், கொடுரமாகவும் கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நரோடா பாடியா, குல்பர்க் சொசைட்டி, நரோடா கேம் வழக்குகளை ஹிமன்சு சுக்லா என்ற எஸ்.பி வசம் எஸ்ஐடி ஒப்படைத்துள்ளது. முன்னதாக இவற்றை எஸ்.பிக்கள் பி.கே.மால், வி.வி.செளத்ரி, டிஎஸ்பி சுதார் ஆகியோர் விசாரித்து வந்தனர். தற்போது அவர்களை இந்த வழக்கிலிருந்து எஸ்ஐடி விடுவித்து விட்டது.

அமீத் ஷாவின் சிறைக்காவல் நீட்டிப்பு

இதற்கிடையே, அமீத் ஷாவின் சிறைக் காவல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனது காவலில் எடுத்து தீவிரமாக விசாரித்தது சிபிஐ. சிபிஐ காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று மாலை ஷாவை கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் தவே வீட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் ஷாவை ஆகஸ்ட் 21ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக நடந்த விசாரணையின்போது இரு மூத்த சிபிஐ அதிகாரிகளான கந்தசாமியும், அமிதாப் தாக்கூரும் இருக்கவில்லை.

நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து சபர்மதி சிறையில் அமீத் ஷா மீண்டும் அடைக்கப்பட்டார். சோராபுதீன் மற்றும் அவரது மனைவி கெளசர் பீ கொலை வழக்கில் அமீத் ஷா கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 25ம் தேதி அவரை சிபிஐ கைது செய்தது. பின்னர் அவரை சிறையில் வைத்து 3 நாட்கள் விசாரித்தது. மீண்டும் அவரை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்து தற்போது மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X