For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுகிறது இலங்கை கடற்படை-நல்லகண்ணு

Google Oneindia Tamil News

ஸ்ரீவைகுண்டம்: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் இலங்கை கடற்படையினர் ஈடுபடுகின்றனர். எனவே கச்சத்தீவை அவர்களிடம் இருந்து மீ்ட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூ கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறினார்.

நெல்லை மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இ.கம்யூ கட்சியின் தேசிய குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு அளித்த பேட்டி...

தமிழக அரசு தற்போது விவசாயிகளுக்கு இலவச மின்மோட்டார் வழங்க திட்டமிட்டுள்ளது. இது பயனளிக்க கூடிய திட்டம் என்றாலும் ஏற்கனவே இங்கு மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் அதை சரிசெய்வதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இலங்கை கடற்படையினர்தான் செய்து வருகின்றனர். தமிழக எல்லைக்குள் வந்து நமது மீனவர்களை தாக்கி வருகின்றனர். இதற்கு கச்ச தீவை அவர்களுக்கு வழங்கியதே காரணம் ஆகும். கச்சி தீவு என்பது முடிந்து போன பிரச்சனை என்று கருதாமல் உடனடியாக அதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லை அண்ணா பல்கலைகழக துணை வேந்தரை தாக்கியது கண்டித்தக்கது. அவர் தாக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு ஒரு முதல் தகவல் அறிக்கை கூட இது வரை பதிவு செய்யவில்லை.

ஸ்ரீவைகுண்டம் அருகே தோழப்பண்ணை கிராமத்தில் மணல் குவாரி அமைத்துள்ளதால் நீராதாரம் பாதிக்கப்படும் என்றார் நல்லகண்ணு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X