For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீன-இலங்கை கூட்டணி: கொழும்பில் இந்திய ராணுவ தளபதி!

By Chakra
Google Oneindia Tamil News

VK Singh Jagat Jayasurya
டெல்லி: இந்திய ராணுவத் தளபதி வி.கே.சிங் 5 நாள் பயணமாக நேற்று இலங்கை சென்றார்.

இந்திய-இலங்கை இடையிலான ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் துவக்க அவர் கொழும்பு சென்றுள்ளார்.

தனது மனைவியுடன் சென்ற சிங்கை கொழும்பு விமான நிலையத்தில், இலங்கை ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்யா வரவேற்றார்.

வி.கே.சிங்குக்கு இன்று ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. அதன்பிறகு அவர் ஜகத் ஜெயசூர்யா மற்றும் இலங்கை ராணுவ உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.

வி.கே.சிங், கடந்த 1987ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதி காக்கும் படை நடத்திய ஆபரேஷன் பவன்' போரில் பங்கேற்றவர் ஆவார். அதற்காக, யுத் சேனா' என்ற விருதும் பெற்றுள்ளார்.

அந்தப் போரில் உயிரிழந்த இந்திய அமைதி காக்கும் படையினரின் நினைவிடத்தில், வி.கே.சிங் இன்று மலரஞ்சலி செலுத்துகிறார்.அந்த நினைவிடம் எழுப்பப்பட்ட பிறகு, அங்கு செல்லும் முதலாவது இந்திய ராணுவ தளபதி இவரே.

மேலும் வவுனியா பகுதிக்கும் சிங் நாளை செல்கிறார்.

இலங்கை அதிபர் ராஜபக்சே, பிரதமர் ஜெயரத்னே, பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் ஆகியோரையும் வி.கே.சிங் சந்தித்துப் பேசுகிறார்.

ராணுவ தளபதி வி.கே.சிங்கை தொடர்ந்து, இந்திய விமானப்படை தளபதி பி.வி.நாயக், பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் ஆகியோரும் இலங்கை செல்ல உள்ளனர்.

கடற்படை தளபதி அட்மிரல் நிர்மல் வர்மா கடந்த ஜுன் மாதம் இலங்கை சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையுடனான ராணுவ உறவை சீனா வலுப்படுத்தி வருவதோடு, இந்தியப் படைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க மையங்களையும் அமைக்க முயன்று வருகிறது. இதையடுத்து இலங்கைக்கு சீனாவை விட அதிகளவில் ராணுவ உதவிகள் செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்ககது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X