For Daily Alerts
காவல் நிலையத்தை மூடும் போராட்டம்-பெரியார் தி.க. அறிவிப்பு
கோவை: திருச்சி தீண்டாமை பிரிவு காவல் நிலையத்தை மூடும் போராட்டத்தை அக்டோபர் 2ம் தேதி நடத்தப் போவதாக பெரியார் தி.க. அறிவித்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தீண்டாமைக் கொடுமையை அனுபவித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க திருச்சி காவல்துறையின் தீண்டாமைப் பிரிவு தவறி விட்டதாக பெரியார் தி.க. குற்றம் சாட்டியுள்ளது. இதைக் கண்டித்து அக்டோபர் 2ம் தேதி திருச்சி தீண்டாமை பிரிவு காவல் நிலையத்தை இழுத்து மூடும் போராட்டம் நடைபெறும் என்று பெரியார் திக அறிவித்துள்ளது.