வருமான வரி செலுத்துவோருக்கு சமையல் எரிவாயு விலையை உயர்த்த திட்டம்?

இந்தியாவில் சுமார் 12 கோடி வீடுகளில் சமையல் எரிவாயு இணைப்பு உள்ளது. இவர்களுக்கு மத்திய அரசு மானிய விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை வழங்கி வருகிறது.
உணவு, எரிபொருள் மற்றும் உரங்களுக்கு மத்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாயை மானியமாக வழங்கி வருகிறது. கடந்த ஆண்டும் மட்டும் 1 லட்சத்து 31 ஆயிரத்து 25 கோடி ரூபாயை மானியமாக மத்திய அரசு வழங்கியது.
இந்த தொகையை ஆண்டுக்கு ஆண்டு கொஞ்சம், கொஞ்சமாக குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2010-11ம் நிதி ஆண்டில் மானிய தொகையை 1 லட்சத்து 16 ஆயிரத்து 224 கோடி ரூபாயாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை கடந்த ஜூன் மாதம் எண்ணை நிறுவனங்களிடமே மத்திய அரசு ஒப்படைத்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது.
தற்போது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 50 காசும், டீசல் விலையை லிட்டருக்கு 25 காசும் உயர்த்த எண்ணை நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. சமையல் எரிவாயு விலை நிர்ணய உரிமையையும் விட்டுக்கொடுக்க கடந்த ஜூன் மாதமே மத்திய அரசு ஆலோசித்தது. ஆனால் மக்கள் அதிருப்தி அடையக்கூடும் என்பதால் தற்காலிகமாக தள்ளிப்போட்டது.
இதற்கிடையே மானிய விலையில் கொடுக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏழைகள் மற்றும் கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும் இனி கொடுக்கலாம் என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
வருமான வரி செலுத்துபவர்களுக்கு வழங்கப்படும் எரிவாயுவுக்கு இனி அதிக விலை நிர்ணயிக்கலாம் என்ற கொள்கை முடிவு எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏழைகளுக்கும், கிராமப்புறத்தில் வசிப்பவர்களுக்கு மட்டும் மானிய விலையில் கொடுத்துவிட்டு, நகர் புறங்களில் வசிப்பவர்களுக்கும், வருமான வரி செலுத்துபவர்களுக்கும் எரிவாயு விலை உயர்த்தப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications