For Daily Alerts
அதிவேகமாக ஓடும் கன்டெய்னர் லாரிகள்-கண்டித்து மீனவர்கள் மறியல்
சென்னை: படு வேகமாக ஓட்டப்படும் கன்டெய்னர் லாரிகளைக் கட்டுப்படுத்தக்க கோரி வட சென்னையில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று திடீரென எண்ணூர் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
இந்த சாலையில் எப்போதும் அதிவேகமாகவே கன்டெய்னர் லாரிகள் செல்கின்றன. இதனால் சாலை விபத்துக்கள் ஏற்பட்டு தொடர்ந்து உயிர்ப்பலி ஏற்பட்டு வருகிறது. இதை காவல்துறை கட்டுப்படுத்தத் தவறுவதாக மீனவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்தப் போராட்டத்தில் ஆண்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த சாலையில் பெரும்பாலும் சென்னை துறைமுகத்திற்கு வரும் கன்டெய்னர் லாரிகள் தான் அதிகம் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
உடனடியாக விரைந்து வந்த போலீஸார் மீனவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.