For Daily Alerts
வேலைக்கு சென்ற போலீஸ்காரர் மாயம்: 4 ஆண்டாகத் தேடல்
பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் காமராஜர் நகரைச் சேர்ந்த அருள் அந்தோணி சாமி என்பவரின் மகன் ஞானராஜ். இவர் தமிழ்நாடு சிறப்புக் காவலர் 11-ம் அணியில் காவலராக ராஜபாளையத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2005-ம் ஆண்டு நவம்பரில் விடுமுறையில் ஊருக்கு வந்து விட்டு வேலைக்குச் சென்றார். ஆனால் அங்கு பணியில் சேரவில்லை. வீட்டிற்கும் வரவில்லை. அவரை 4 ஆண்டாகத் தேடியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
அவரது தம்பி ஞானசுந்தர் இது குறித்து பாவூர்சத்திரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சண்முகம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பா ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாயமான ஞானராஜூக்கு இன்னும் திருமணமாகவில்லை. அவரது தந்தை அருள் அந்தோணி சாமி பாவூர்சத்திரம் போலீசில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த ஆண்டு பணியின்போது இறந்து விட்டது குறிப்பிடத்தக்கது.