நாளை காலை சென்னை வருகிறார் சோனியா-மாலையில் திருச்சி கூட்டத்தில் பேச்சு
சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நாளை காலை சென்னை வருகிறார். அங்கிருந்து புதுச்சேரி சென்று சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மாலையில் திருச்சியில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.
நாளை காலை 9 மணிக்கு சென்னைக்கு வருகிறார் சோனியா. அவருடன் அமைச்சர்கள் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் வருகின்றனர். சென்னை வந்து சேர்ந்ததும் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார் சோனியா.
புதுச்சேரியில் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி மகளிர், குழந்தைகள் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.
இது முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி செல்கிறார். மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் நடைபெறும் காங்கிரஸ் கட்சியின் 125வது ஆண்டு விழா, 4வது முறையாக காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கான பாராட்டு விழா, திருநாவுக்கரசர் காங்கிரஸில் இணையும் விழா ஆகிய முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதை பொதுக் கூட்டமாக பெரும் கூட்டத்தைக் கூட்டி நடத்த காங்கிரஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதை முடித்துக் கொண்ட பின்னர் சோனியா டெல்லி திரும்புகிறார்.
4வது முறையாக காங்கிரஸ் தலைவராகப் பதவியேற்ற பின்னர் தமிழகத்திற்கு முதல் முறையாக வருகிறார் சோனியா. இதையடுத்து அவருக்கு விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு தரகாங்கிரஸார் தயாராகி வருகின்றனர்.
சோனியா வருகையைத் தொடர்ந்து சென்னை விமான நிலையம், திருச்சி கூட்டம், புதுச்சேரி ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சியில் சோனியா காந்தி பேசவுள்ள மேடை குண்டு துளைக்காத மேடையாக அமைக்கப்பட்டுள்ளது. சோனியா காந்திக்காக குண்டு துளைக்காத காரும் டெல்லியிலிருந்து வந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications