For Daily Alerts
Just In
தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா ரஷ்யா பயணம்
டெல்லி: மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராஜா ஐந்து நாள் பயணமாக ரஷ்யா புறப்பட்டுச் சென்றார்.
உயர் மட்ட அதிகாரிகள் குழுவுடன் ராஜா ரஷ்யா கிளம்பிச் சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பதங்கள் கையெழுத்தாகவுள்ளன.
தொழில்நுட்பப் பகிர்வு, தகவல் தொழில்நுட்ப மேம்பாடு தொடர்பான ஒப்பந்தங்கள் இவை.
தனது பயணத்தின்போது தகவல் தொழில்நுட்பக் கருவிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளையும் ராஜா பார்வையிடுகிறார்.
தனது பயணத்தை முடித்துக் கொண்டு 16ம் தேதி ராஜா டெல்லி திரும்புவார்.