For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக, தேமுதிக நிர்வாகிகள் நீக்கம்: ஜெ-விஜய்காந்த் அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: மதுரை, கோவை, புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு அதிமுக நிர்வாகிகளை நீக்கி பந்தாடியுள்ளார் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக மருத்துவ அணி துணை செயலாளர் பொறுப்பில் ஆர்.கே.சிவக்குமார், தென் சென்னை மாவட்ட மருத்துவ அணி இணைச் செயலாளர் பொறுப்பில் கே.அண்ணாமலை, வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பொறுப்பில் தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் ஏ.ஜி.தங்கப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை புறநகர் மாவட்டம், மதுரை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.ராமமூர்த்தி, மதுரை மேற்கு ஒன்றிய விவசாயப் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.முருகேசன் ஆகியோர் அவரவர் வகித்துவரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

மதுரை புறநகர் மாவட்டம், மதுரை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் கே.முருகேசன், மதுரை மேற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் எம்.ராமமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

கோவை புறநகர் மாவட்டம், தொண்டாமுத்தூர் ஒன்றிய ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.எம்.சண்முகம், தொண்டாமுத்தூர் பேரூராட்சி கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் முத்து ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

கோவை புறநகர் மாவட்டம் தொண்டாமுத்தூர் பேரூராட்சி கழகச் செயலாளர் பொறுப்பில் டி.எம்.சண்முகம், தொண்டாமுத்தூர் பேரூராட்சி எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் வி.முத்து ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.செல்வம், கன்னியாகுமரி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் இ.சகாயம் என்ற ஐயப்பன், கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருக்கும் டாக்டர் டி.எபநேசர், நாகர்கோவில் நகர கழக அவைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் எம்.நரசிங்கமூர்த்தி ஆகியோர் அவரவர் வகித்துவரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட இணைச் செயலாளராக டாக்டர் டி.எபநேசர், கன்னியாகுமரி மாவட்ட கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை தலைவராக டி.செல்வம், மாவட்ட செயலாளராக பால ஜனாதிபதி, கன்னியாகுமரி மாவட்ட இலக்கிய அணி மாவட்ட செயலாளராக எம்.நரசிங்கமூர்த்தி, கன்னியாகுமரி மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளராக இ.சகாயம் என்ற ஐயப்பன், நாகர்கோவில் நகரக் கழக அவைத்தலைவராக வி.கே.மகாதேவன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றிய கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஏ.முருகன், திருமயம் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஏ.எல்.ராமு என்ற ராமசாமி, குண்டாண்டார்கோவில் ஒன்றிய கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.வி.திருஷ்ணமூர்த்தி, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஆர்.பால்ராஜ், பொன்னமராவதி பேரூராட்சி கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் அ.தங்கப்பன் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

திருமயம் ஒன்றிய செயலாளராக எ.எல்.ராமு என்ற ராமசாமி, திருமயம் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய இணை செயலாளராக ஏ.முருகன், குண்டாண்டார்கோவில் ஒன்றிய செயலாளராக ஆர்.பால்ராஜ், குண்டாண்டார்கோவில் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய இணைச் செயலாளராக கே.வி.கிருஷ்ணமூர்த்தி, பொன்னமராவதி பேரூராட்சி கழகச் பேரூராட்சி செயலாளராக பி.எல்.ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

தூத்துக்குடி, கடலூர் தேமுதிக செயலாளர்கள் நீக்கம்:

ஜெயலலிதாவுக்குப் போட்டியாக தனது கட்சியிலும் மாவட்டச் செயலாளர்கள் சிலரையும் நீக்கியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேமுதிக கடலூர் தெற்கு மாவட்ட செயலாளராக செயல்பட்டு வரும் ஆர்.உமாநாத் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். கடலூர் தெற்கு மாவட்ட துணை செயலாளராக செயல்பட்டு வரும் சபா.சசிகுமார் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுகிறார். சபா.சசிகுமார் செயல்பட்டு வரும் கடலூர் தெற்கு மாவட்ட துணை செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக செயல்பட்டு வரும் கோமதி ஆ.கணேசன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். தூத்துக்குடி நகர செயலாளராக செயல்பட்டு வரும் என்.சண்முகராஜா தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுகிறார். என்.சண்முகராஜா செயல்பட்டு வரும் தூத்துக்குடி நகர செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக நம்பிiர் ஒன்றிய செயலாளராக செயல்பட்டு வரும் பி.செந்தில்குமார் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுகிறார். இதுவரை ஈரோடு வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக செயல்பட்டு வந்த வி.சி.சந்திரகுமார் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக செயல்பட்டு வந்த ரோஜாம்மாள் விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக தாமஸ்மலை ஒன்றிய மகளிரணி துணை செயலாளராக செயல்பட்டு வரும் தேவிகா சுந்தரம் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட மகளிரணி செயலாளராக நியமிக்கப்படுகிறார். ரோஜாம்மாள் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.

காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம் தாம்பரம் நகர செயலாளராக டி.எம்.ஜி.குருசேவ் நியமிக்கப்படுகிறார். தாம்பரம் நகர பொறுப்பாளராக செயல்பட்டு வரும் கண்ணையா விடுவிக்கப்படுகிறார்.

கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி நகர பொருளாளர் வங்கி என்ற வெங்கடேஸ்வரன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டதாலும் அவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

நாகப்பட்டினம் வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை நகர செயலாளராக பண்ணை சொ.பாலு நியமிக்கப்படுகிறார். அவர் வகித்து செயல்பட்டு வந்த மாவட்ட மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளராக ஆர்.ராஜேஷ் எனற முத்து சுப்பிரமணியன் நியமிக்கப்படுகிறார்.

நாகப்பட்டினம் வடக்கு மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி செயலாளராக செயல்பட்டு வந்த எம்.குரு விடுவிக்கப்பட்டு, எம். அருண்குமார் நியமிக்கப்படுகிறார்.

கோவை தெற்கு மாவட்டம் உடுமலைப்பேட்டை நகர செயலாளர் டி.சண்முகம், கேப்டன் மன்ற செயலாளர் சத்தியமூர்த்தி, நகர துணை செயலாளர் தாஜ×தீன் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அவர்கள் தாங்கள் செயல்பட்டு வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X