For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ளத்தில் மக்கள் திண்டாட்டம்..சினிமா விழாவில் கருணாநிதி கொண்டாட்டம்: ஜெயலலிதா

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: வெள்ள நிவாரணப் பணிகளில் முதல்வர் கருணாநிதி்க்கு அக்கறை இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறி்யுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளத்தால் தமிழக மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும்போது, தன்னுடைய 'இளைஞன்' திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

கடந்த பத்து நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடர் கனமழை காரணமாக நூற்றுக்கணக்கான கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதோடு மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன. 27,000க்கும் மேற்பட்ட குடிசைகள் சேதமடைந்துள்ளன. இந்த கனமழைக்கு இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளனர். 2,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன.

இந்தச் சூழ்நிலையில், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளையும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளையும் செய்ய வேண்டிய மாநில அரசு அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருகிறது.

பெரும்பாலான இடங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் கூட வழங்கப்படவில்லை. போதுமான நிவாரண முகாம்கள் அமைக்கப்படவில்லை. மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துவிட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் அகதிகள் போல் பேருந்து நிலையங்களில் தங்கி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

உதாரணமாக, கடலூர் மாவட்டம் நாஞ்சில் பகுதியைச் சேர்ந்த மக்களை சிறப்பு அதிகாரி ஆய்வு செய்த போது, இரண்டு நாள்களாக உணவுப் பொருள்கள் கூட வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பெரும்பாலான இடங்களில் அரசு அதிகாரிகளால் செய்யப்படும் ஆய்வு கூட முறையாக செய்யப்படவில்லை என்றும், அதிகாரிகளின் ஆய்வு ஒரு கண்துடைப்பு என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

2005ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் பெருமழை ஏற்பட்ட போது தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களுக்கு நானே நேரில் சென்று நிவாரண உதவிகளை வழங்கினேன். அனைத்துப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் சரியாக நடைபெறுகிறதா என்பதைக் கண்காணிக்க அமைச்சர்களும், மூத்த அதிகாரிகளும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

ஆனால், இன்று பெருவெள்ளம் காரணமாக மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது, முதல்வர் கருணாநிதி பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு இருக்கிறார். பெரும்பாலான அமைச்சர்களும் அவ்விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், அதிமுகவினர் ஆங்காங்கே மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை செய்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தொடர் கனமழையால் பாதிக்கப்பட்ட மற்ற இடங்களிலும் மக்களுக்குத் தேவையான உதவிகளை அதிமுகவினர் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
ADMK general secretary, J. Jayalalithaa, accused the ruling DMK of being “callous” in extending relief to the rain affected in the state and called upon her party members to involve themselves in relief work. “At a time when the people are affected by rains, chief minister Karunanidhi is engrossed in the audio release of his Tamil film – Ilaignan,” she said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X