For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கதேசத்தில் 2 ரயில்கள் நேருக்குநேர் மோதியதில் 21 பேர் பலி

Google Oneindia Tamil News

டாக்கா: வங்கதேசத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 21 பேர் பலியாகியுள்ளனர், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வங்கதேசம் தலைநகர் டாக்காவின் வடகிழக்கு பகுதியில் இருந்து 51 கிமீ தொலைவில் நார்சிங்டி என்னும் இடத்தில் ரயில் நிலையம் உள்ளது. அங்கு நேற்று மாலை 5 மணி அளவில் நின்று கொண்டிருந்த ரயில் மீது நிலையத்திற்குள் வந்த ரயில் பயங்கரமாக மோதியது. இதில் பெரும்பாலான பெட்டிகள் தடம்புரண்டன.

இந்த விபத்தில் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர், 21 பேர் பலியாகினர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது. இந்த சம்பவம் நடந்தபோது பணியில் இருக்க வேண்டிய ஸ்டேஷன் மாஸ்டர்கள் அங்கு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

மீட்புப் பணிகளில் ராணுவத்தாரும், அவசர சேவைப் பிரிவினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

English summary
Two passenger trains collided with each other in Narsingdi railway station in Bangladesh capital Dhaka. Atleast 21 killed and hundreds of people are injured in this accident. Police told that the station masters who were supposed to be in the station were not there. Military and emergency services are involved in the rescue operation. People fear that the death toll may increase.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X