For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்வீடன் அரசின் இணையதளத்தை ஹாக் செய்த விக்கிலீக்ஸ் ஆதரவாளர்கள்: 12 மணி நேரத்திறகும் மேலாக செயலிழப்பு

Google Oneindia Tamil News

ஸ்டாக்ஹோம்: உலகையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறது விக்கிலீக்ஸ். விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியான் அஸ்ஸான்ஜ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு ஹாக்கர்ஸ் குழு ஸ்வீடன் அரசின் இணையதளத்தை ஹாக் செய்து முடக்கி ஸ்வீடன் அரசை அதிர வைத்துள்ளது.

விக்கிலீக்ஸ் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்ட அவர்கள் சுவீடன் அரசின் இணையதளத்தை( http://www.regeringen.se/ ) 12 மணி நேரத்திற்கும் மேலாக செயல் இழக்கச் செய்தனர்.

இன்று அரசு தங்கள் இணையதளத்தை பயன்படுத்த முயன்றபோது அவர்களால் அதற்குள் செல்லமுடியவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் சர்வரை அணுக முடியவில்லை என்றே வந்துள்ளது என்று ஸ்வீடன் ஊடகம் தெரிவித்துள்ளது.

ஸ்வீடன் நாட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்பேரில் தான் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியான் அஸ்ஸான்ஜ் கைது செய்யப்பட்டார். அவர் மீது கற்பழிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதற்குமுன் விக்கிலீக்ஸ் ஆதரவாளர்கள் விசா இணையதளத்தை ஹாக் செய்தனர். மேலும், அலாஸ்காவின் முன்னாள் ஆளுநர் சாரா பாலின் இணையதளத்தையும் ஹாக் செய்தனர். சாரா அஸ்ஸான்ஜை இரத்தக்கறை படிந்த கைகளுடன் அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுபவர் என்று விமர்சித்திருந்தார்.

English summary
WikiLeaks supporters hacked Swedish government website and made it offline for more than 12 hours. Swedish court had issued an arrest warrant against WikiLeaks founder Julian Assange. He was arrested on rape and sexual molestation charges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X