For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முல்லைப் பெரியாறு அணை: 5 பேர் குழு நேற்றிரவு சென்னை வருகை-இன்று ஆய்வு

Google Oneindia Tamil News

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள குழு நேற்றிரவு சென்னை வந்தனர். அவர்கள் இன்று முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்யவிருக்கின்றனர்.

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஒரு உயர் மட்ட குழுவை அமைத்து, சர்ச்சைக்குரிய அணையை ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்த குழுவில் தமிழகத்தின் சார்பில் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரளா சார்பில் நீதிபதி தாமஸ், நீதிபதிகள் மேத்தா, த்தா மற்றும் 6 பொறியாளர்கள் உள்ளனர்.

முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்வதற்காக இந்த குழு நேற்றிரவு 9. 30 மணி அளவில் விமானம் மூலம் சென்னை வந்தது. இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் அவர்கள், அங்கிருந்து அணைக்கு சென்று ஆய்வு செய்கின்றனர்.

English summary
5 member team appointed by the central government came to Chennai last night. They are going to Mullaiperiyar dam today to conduct a survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X