சட்டமேலவை தேர்தல்: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு-ஒரு வாரத்தில் ஆனைலைனில்
சென்னை: தமிழக சட்டமன்ற மேல்சபை தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இன்னும் ஒரு வாரத்தில் இது ஆன்லைனிலும் வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் மேல்சபை தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் வாக்களர்களாக பட்டதாரி, ஆசிரியர்கள் சேர்க்கப்படும் பணி நிறைவடைந்தது. இதையடுத்து நேற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது உருவாக்கப்படும் மேலவைக்கு 78 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். அதில் 26 பேரை எம்எல்ஏக்களும், 26 பேரை உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் தேர்ந்தெடுப்பார்கள். மீதமுள்ள 26 பேர்களில் 12 பேரை ஆளுநர் நியமிப்பார். 7 பேரை ஆசிரியர்களும், 7 பேரை பட்டதாரிகளும் தேர்வு செய்வார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள 31 மாவட்டங்கள் 7 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 7 தொகுதிகளில் உள்ள பட்டதாரிகள், ஆசிரியர்களை வாக்காளர்களாகச் சேர்க்கும் பணி நிறைவடைந்தது.
இதன்படி சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளடக்கிய பட்டதாரி தொகுதியில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து ஐந்து பட்டதாரிகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. ஆசிரியர் தொகுதியில் 23 ஆயிரத்து 992 பேர் கொண்ட ஆசிரியர்கள் பட்டியிலும் வெளியிடப்பட்டது. இதேபோன்று மாநிலத்தின் மற்ற தொகுதிகளுக்குமான இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த இறுதி பட்டியல் மாவட்டக் ஆட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாநகரங்களில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியல் இன்னும் ஒரு வாரத்தில் ஆன்லைனில் வெளியிடப்படும்.
தெற்கு தொகுதி பட்டியல் வெளியீடு
சட்ட மேலவை தேர்தலுக்கான தமிழ்நாடு தெற்கு பட்டதாரிகள், ஆசிரியர்கள், தொகுதியின் இறுதி வாக்காளர் பட்டியலை நெல்லை கலெக்டர் ஜெயராமன் வெளியிட்டார்.
சட்ட மேலவை தேர்தலுக்கு தமிழ்நாடு தெற்கு ஆசிரியர்கள், பட்டதாரிகள் தொகுதி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கியது. தமிழ்நாடு தெற்கு பட்டதாரிகள், ஆசிரியர்கள் தொகுதியின் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த நவம்பர் மாதம் 22-ம் தேதி வெளியிடப்பட்டது.
அப்போது தமிழ்நாடு தெற்கு பட்டதாரிகள் தொகுதியில் 48693 வாக்காளர்களும், தமிழ்நாடு தெற்கு ஆசிரியர்கள் தொகுதியில் 12652 வாக்காளர்களும் இடம் பெற்றிருந்தனர். விடுபட்ட வாக்களர்கள் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய ஒரே தொகுதிக்குள் மாற்ற டிசம்பர் மாதம் 16-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதை தொடர்ந்து தமிழ்நாடு தெற்கு ஆசிரியர்கள், பட்டதாரிகள் தொகுதியின் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஜெயராமன் நேற்று வெளியி்ட்டார். தமிழ்நாடு தெற்கு பட்டதாரிகள் தொகுதியில் 104887 வாக்காளர்கள்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications