காமன்வெல்த் போட்டிக் குழுத் தலைவர் பதவியிலிருந்து சுரேஷ் கல்மாடி நீக்கம்
டெல்லி: காமன்வெல்த் போட்டிக் குழுத் தலைவர் பதவியிலிருந்து சுரேஷ் கல்மாடியை நீக்கியுள்ளனர். முதலிலேயே இதைச் செய்யாமல் இத்தனை காலம் கழித்து நடவடிக்கை எடுத்துள்ளது மத்திய அரசு.
டெல்லி காமன்வெல்த் போட்டி தொடர்பான ஊழல்கள் புற்றீசல் போல கிளம்பி வந்தபோது, கல்மாடியை நீக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதை அப்போது மத்திய அரசு ஏற்கவில்லை. போட்டி முடிந்த பிறகு பார்க்கலாம் என்று கூறியது. போட்டி முடிந்த பிறகும் கூட கல்மாடி நீக்கப்படவில்லை. மாறாக சிபிஐ ரெய்டு, விசாரணை என்று நடந்து வந்தது. இந்த நிலையில் இன்று கல்மாடி நீக்கப்பட்டுள்ளார்.
விசாரணை பாரபட்சமின்றியும், நியாயமாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்யும் வகையில் கல்மாடி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக அட்டர்னி ஜெனரலின் அறிவுரையும் பெறப்பட்டுள்ளதாம்.
கல்மாடியின் நெருங்கிய கூட்டாளியான, போட்டி பொதுச் செயலாளர் லலித் பானட்டும் நீக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவுகளை புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மேக்கான் பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விசாரணை பாரபட்சமின்றி நடைபெற வேண்டும். மேலும், கல்மாடி பதவியில் தொடருவது குறித்து சிபிஐ கவலை தெரிவித்திருந்தது. இதையடுத்து கல்மாடியை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
தனது பொறுப்புகளை காமன்வெல்த் போட்டிக் குழுவின் தலைமை செயல் அதிகாரி ஜர்னைல் சிங்கிடம் ஒப்படைக்க கல்மாடி அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
அடுத்த உத்தரவு வரும் வரை தலைவர் பொறுப்புகளை ஜர்னைல் சிங் வகிப்பார் என்றார்.
கல்மாடியும், பானட்டும் இத்தனை நாட்களாக பதவிகளை ராஜினாமா செய்ய முடியாது என்று பிடிவாதமாக இருந்து வந்ததும் நினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications