தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை ஒருமுறை கூட இந்திய அரசு தடுக்கவில்லையே? திருமா
சென்னை: கடந்த 1983-ம் ஆண்டிலிருந்து தொடரும் இந்த தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் கொடுமைகளை கண்டிக்கவோ தடுக்கவோ இந்திய அரசு ஒரே ஒரு முறை கூட முன்வரவில்லையென்பது வேதனையளிக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
கடந்த 12-ந்தேதி நாகை மாவட்டம் சின்னங் குடியைச் சேர்ந்த மீனவர் பாண்டியன் இதே சிங்கள இனவெறியர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அந்த வேதனையின் வலி மறைவதற்குள் மீண்டும் ஜெயக்குமார் என்பவரை படுகொலை செய்துள்ளது இடிமேல் இடி விழுந்த பெருங்கொடுமையாய் நெஞ்சைச் சுட்டெரிக்கிறது.
அடுக்கடுக்கான படு கொலைகள் நடந்தும் கூட இந்திய அரசு இத்தகைய போக்குகளை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை என்பது சிங்களவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவே அமைகிறது. சர்வ தேசக் கடல் எல்லையைத் தாண்டி வந்து தமிழக மீனவர்களின் உடமைகளைச் சூறையாடுவதும் எண்ணற்ற உயிர்களைப் பறிப்பதும் சிங்களவர்களின் வாடிக்கையாகவே அமைந்துள்ளது.
கடந்த 1983-ம் ஆண்டிலிருந்து தொடரும் இந்த கொடுமைகளை கண்டிக்கவோ தடுக்கவோ இந்திய அரசு ஒரே ஒரு முறை கூட முன்வரவில்லையென்பது மேலும் வேதனையளிக்கிறது.
தமிழீழ மக்களை மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருகிற இந்திய அரசின் போக்கையும் இலங்கை அரசையும் விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது. படுகொலையான ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு விடுதலைச் சிறுத்தைகளின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இழப்பீட்டு தொகையாக அவரது குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் வழங்கியுள்ள தமிழக அரசு, அதனை ரூ. 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதுடன் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் விடுதலை சிறுத்தைகளின் சார்பில் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications