For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யாரிடம் இந்த பூச்சாண்டி?-சு.சாமிக்கு வீரமணி கேள்வி

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: சுப்பிரமணிய சுவாமிக்கு ஆதரவு தரும் தலைவர்கள் 2011 மே மாதத்துக்குப் பிறகு மூக்கறுபட ஆயத்தமாகிறார்கள் என்று கூறியுள்ளார்.

என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு மற்றும் வீட்டுமனை ஒதுக்கீட்டில் 15 சதவீதம் விருப்புரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் முறை அதிமுக ஆட்சியில் இருந்தபோது தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

அவ்வாறு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு அதன் விலையிலோ பத்திரப் பதிவிலோ எந்தவித சலுகையும் வழங்கப்படவில்லை. எனவே, தமிழக அரசுக்கும், வீட்டு வசதி வாரியத்துக்கும் எந்த நஷ்டமும் ஏற்படவில்லை.

இது தொடர்பாக வருவாய்த்துறை அமைச்சரும், முதல்வர் கருணாநிதியும் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளனர்.

மும்பையில் கார்கில் வீரர்களின் குடும்பத்தினருக்காக கட்டப்பட்ட இடங்களில் முறைகேடு நடந்தது. அந்த குடியிருப்புகளை அந்த மாநில முதல்வரின் குடும்பத்தினரும் அதிகாரிகளும் தங்களுக்கு ஒதுக்கிக்கொண்டதும் இதுவும் ஒன்றல்ல. மகாராஷ்டிர முதல்வர் பதவி விலக கோரப்பட்டதன் அடிப்படையே வேறு.

இந்த லட்சணத்தில் முதல்வர் கருணாநிதி மீது 23 வழக்குகள் தொடரப் போகிறாராரம் சுப்பிரமணிய சுவாமி. யாரிடம் இந்த பூச்சாண்டி?

சுப்பிரமணிய சுவாமிக்கு ஆதரவு தரும் தலைவர்கள் 2011 மே மாதத்துக்குப் பிறகு (தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்) மூக்கறுபட ஆயத்தமாகிறார்கள் என்று கூறியுள்ளார்.

English summary
Dravidar Kalagam president K.Veeramani has extended his support to CM Karunanidhi over TNHB allotments issue. In a statement he has warned those who support Janatha party chief Subramaniam Swamy will get exposed after Tamil Nadu assembly polls
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X