For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

19ல் வரும் சூப்பர்மூன் நிகழ்வால் பேரழிவுகள் ஏற்படலாம்-நிபுணர்கள் எச்சரிக்கை

By Siva
Google Oneindia Tamil News

லண்டன்: ஜப்பானை இன்று மிகப் பெரிய நிலநடுக்கமும், சுனாமியும் தாக்கியுள்ள நிலையில் மார்ச் 19ம் தேதி பூமிக்கு மிக அருகே சந்திரன் நெருங்கி வருவதால், மிகப் பெரிய அளவில் பேரழிவுகள் ஏற்படும் என வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வரும் 19-ம் தேதி சந்திரன், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமிக்கு மிக அருகில் வருகிறது. அன்றைய தினம், பூமிக்கு 2 லட்சத்து 21 ஆயிரத்து 556 மைல் தூரத்தில் சந்திரன் நெருங்கி வரும். இதை சூப்பர் மூன் நிகழ்வு என்கிறார்கள் வி்ஞ்ஞானிகள். இதனால் அடுத்த வாரம் பேரழிவுகள் நடக்கலாம் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சூப்பர் மூன் நிகழ்வால்,

உலகில் நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் உள்ளிட்ட பேரழிவுகளைத் தூண்டும் என்பது நிபுணர்கள் கருத்து.

இதற்கு முன் 1955, 1974, 1992 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் இந்த சூப்பர்மூன் நிகழ்வு நடந்துள்ளது. அந்த 4 ஆண்டுகளிலுமே மோசமான வானிலை நிகழ்வுகள் நடந்துள்ளன.

சந்திரனால், பூகம்பத்தை ஏற்படுத்த முடியாது. ஆனால் கடல் அலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் வானிலையோடு சேர்ந்தால் கடலோரப் பகுதிகளில் பேரழிவுகள் ஏற்படும் என்று வானிலை ஆய்வாளர் ஜான் கெட்லி தெரிவித்துள்ளார்.

English summary
Earth's natural satellite is coming close to the earth on march 19 which may trigger earthquakes, volcanic eruptions and other disaster. Since moon is coming too close to earth unlike in nearly 20 years, this event is called extreme supermoon. Supermoon happened in 1955, 1974, 1992 and 2005. Those 4 years saw extreme weather events.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X