For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் இன்று ரிலீஸ்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக கூட்டணிக் கட்சிகளில் யார் யார் எந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ளனர் என்ற பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது.

திமுக கூட்டணிக்கான தொகுதிப் பங்கீடும், தொகுதி பிரிப்பும் வெற்றிகரமாக முடிந்து விட்டது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் 16ம் தேதி அறிவிக்கப்படவுள்ளனர் என்று திமுக அறிவித்து விட்டது.

இந்த நிலையில் இன்று மாலை திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் எவை என்ற பட்டியலை திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி வெளியிடவுள்ளார்.

திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதி எண்ணிக்கை:

மொத்தம் - 234 தொகுதிகள்

திமுக -120.
காங்கிரஸ் - 63
பாமக - 30
விடுதலைச் சிறுத்தைகள் - 10
கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் - 7
இந்திய யூனியன் முஸ்லீ்ம் லீ்க் - 2
ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் -1
பெருந்தலைவர் மக்கள் கட்சி - 1

இதில் இந்திய யூனியன் முஸ்லீ்ம் லீ்க், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. இதன்படி அதிகாரப்பூர்வமாக திமுக 124 தொகுதிகள் போட்டியிடுகிறது.

இன்று தொகுதிகள் எண்ணிக்கைப் பட்டியலை வெளியிட்டு முடித்தவுடன் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் தத்தமது வேட்பாளர் பட்டியலை அடுத்தடுத்து வெளியிடும் என்று தெரிகிறது.

பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொமுக ஆகியவை ஏற்கனவே வேட்பாளர்களைத் தேர்வு செய்து முடித்து விட்டதாக தெரிகிறது. எனவே அக்கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் உடனடியாக வெளியாகக் கூடும் என்று தெரிகிறது.

English summary
DMK chief and CM Karunanidhi to release DMK front parties' seat allocation list today. DMK is contesting in 120 seats. Congress 63, VCK 10 and KMK 7 are other major parties of the front. DMK will release its candidates list on March 16.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X