For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டமன்றத் தேர்தலில் திருவாரூரில் கருணாநிதி போட்டி

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: வரும் சட்டமன்றத் தேர்தலில் தான் பிறந்த திருவாரூரில் போட்டியிடுகிறார் முதல்வர் கருணாநிதி.

தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக 119 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கனவே காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில் இன்று திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் கருணாநிதி பட்டியலை வெளியிட்டார். அதன்படி முதல்வர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

வேட்பாளர்களில் 58 பேர் புதுமுகங்கள் ஆவர். பெண் வேட்பாளர்கள் 11 பேர்.

திருவாரூர் தொகுதி இத்தனை ஆண்டுகளாக தனித் தொகுதியாக இருந்து வந்தது. இதனால் இத்தனை ஆண்டுகளாக இந்தத் தொகுதியில் கருணாநிதியால் போட்டியிட முடியாத நிலை இருந்தது.

இப்போது தான் முதன்முதலில் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இந் நிலையில் இந்தத் தொகுதியில் கருணாநிதி போட்டியிடுகிறார்.

துணை முதல்வர் ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஆயிரம் விளக்கு தொகுதியிலிருந்து மாறி போட்டியிடுகிறார்.

படித்த வாக்காளர்கள் அதிகமுள்ள சென்னையில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தால் திமுகவுக்கு எதிரான அலை வீசுவதாகத் தெரியவந்ததையடுத்து முதல்வர் கருணாநிதி திருவாரூருக்கு மாறியதாகக் கூறப்படுகிறது.

English summary
CM Karunanidhi to contest from Tiruvarror and MK Stalin to contest from Chennai Kolathur in the upcoming assembly polls in Tamil Nadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X