For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை எடுபடாது-கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
திருவாரூர்: ஜெயலலிதா வெளியிட்டுள்ள அதிமுக தேர்தல் அறிக்கை மக்களிடையே எடுபடாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதி தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக சென்னை தொகுதிகளில் நின்று வென்ற அவர் இதுவரை தோல்வியே காணாத பெருமைக்குரியவர்.

இந்தநிலையில் 12வதுமுறையாக தேர்தல் களம் காணும் கருணாநிதி, இம்முறை தான் வளர்ந்த திருவாரூரில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை இன்று அவர் தாக்கல் செய்தார்.

திருவாரூரில் உள்ள, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியான ஜெயராஜிடம் தனது வேட்பு மனுவை முதல்வர் தாக்கல் செய்தார்.

அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த கருணாநிதியிடம், ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சலுகைகள் மக்கள் மத்தியில் எடுபடாது. தி.மு.க., கூட்டணி தான் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

முன்னதாக இன்று காலை காட்டூரில் உள்ள தனது தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்திற்குச் சென்று முதல்வர் அஞ்சலி செலுத்தினார்.

வேட்பு மனு தாக்கலைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதி தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.

இன்று மாலை தஞ்சை செல்லும் கருணாநிதி அங்குள்ள திலகர் திடலில் நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார். அதன் பின்னர் நாளை திருச்சி சென்று அங்கு நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறார்.

கருணாநிதி இதுவரை போட்டியிட்ட தொகுதிகள் விவரம்:

1957 - குளித்தலை
1962 - தஞ்சாவூர்
1967 - சைதாப்பேட்டை
1971 - சைதாப்பேட்டை
1977 - அண்ணா நகர்
1980 - அண்ணா நகர்
1989 - துறைமுகம்
1991 - துறைமுகம்
1996 - சேப்பாக்கம்
2001 - சேப்பாக்கம்

English summary
CM Karunanidhi set to contest for 12th time for TN assembly. He will file nomination papers today in Thiruvarur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X