• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிஷிவந்தியத்தை குஷிவந்தியமாக மாற்றுவதே லட்சியம்-விஜயகாந்த்

|

Vijayakanth
திருக்கோவிலூர்: ரிஷிவந்தியம் தொகுதியில் ஏதாவது மாற்றம் செய்யவேண்டும் என்ற முடிவோடு தான் இங்கு போட்டியிடுகிறேன். ரிஷிவந்தியத்தை குஷிவந்தியமாக மாற்றுவதே எனது லட்சியம். கடந்த முறை போட்டியிட்ட விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் இருக்கிறார். ரிஷிவந்தியத்தில் அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார், சிவன் இருக்கும் இடத்தில் எல்லாம் இந்த விஜயகாந்த் இருப்பான் என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

திருக்கோவிலூர் ஐந்துமுனை ரோட்டில் தனது பிரசாரத்தை நேற்று விஜயகாந்த் தொடங்கினார். அப்போது அவர் பேசுகையில்,

என் மக்கள் நலனுக்காகவே கூட்டணி

விஜயகாந்த் தெய்வத்தோடு, மக்களோடு கூட்டணி என்று சொல்லிவிட்டு அ.தி.மு.க., வோடு எப்படி கூட்டணி வைத்தார் என கேட்பார்கள். தெய்வத்தோடு, மக்களோடு இருக்கும் கூட்டணி எப்போதும் இருக்கும். நான் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கவில்லை. என் மக்களின் நலனுக்காகத்தான், இந்த கூட்டணியை அமைத்துள்ளேன்.

கீழையும், மேலயும் பிரிச்சு மேயராங்க

காங்., கட்சியின் ஐவர் குழு, அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு நடத்திக்கிட்டு இருக்கு. மனைவி, மகளை மேல் மாடியில சி.பி.ஐ., விசாரிச்சிக்கிட்டு இருக்காங்க. கீழையும் பிரிச்சி மேயராங்க, மேலயும் பிரிச்சி மேயராங்க இதுதான் அரசியல்.

கருணாநிதியின் தாரக மந்திரம் எங்கும் தமிழ் எதிலும் தமிழ், எங்கும் ஊழல் எதிலும் ஊழல். அதுதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க., கூட்டணி அரசை தெய்வம் காலி செய்யும்.

ராமதாஸ், கருணாநிதிக்கு பூஜ்யம் மார்க் போட்டார். இப்ப சொல்றார் கருணாநிதி ஹீரோவாம். இது கொள்கை கூட்டணி இல்லை, மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் கூட்டணி. இரண்டு ஏக்கர் நிலம் யாருக்கு கொடுத்தனர். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தருவதாகக் கூறி நீங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில், ஐந்து லட்சம் பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை.

அழகிரி மிரட்டல் என்னிடம் செல்லாது

மதுரைக்கு வந்து பிரசாரம் பண்ணிப்பார் என்று அழகிரி கூறுகிறார். மதுரைக்கு பிரசாரத்துக்கு வருவேன். இந்த உருட்டல் மிரட்டல தான் உங்க ஆட்சி நடந்துட்டு இருக்கு அது என்கிட்ட செல்லாது.

ரிஷிவந்தியம் தொகுதியில் ஏதாவது மாற்றம் செய்யவேண்டும் என்ற முடிவோடு தான் இங்கு போட்டியிடுகிறேன். ரிஷிவந்தியத்தை குஷிவந்தியமாக மாற்றுவதே எனது லட்சியம். ஏன் ரிஷிவந்தியத்தில் போட்டியிட முடிவு செய்தேன் என்பதை உங்களுக்கு கூற கடமைப்பட்டுள்ளேன்.

நான் கடந்த முறை போட்டியிட்ட விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் இருக்கிறார். ரிஷிவந்தியத்தில் அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார், சிவன் இருக்கும் இடத்தில் எல்லாம் இந்த விஜயகாந்த் இருப்பான். சிவன் எப்படி தனது மனைவிக்கு சரிபாதி அளித்தாரோ, அதேபோல் எனது மனைவிக்கு நானும் சமஉரிமை அளித்துள்ளேன். சிவன் அதர்மத்தை அழிப்பவர். அதனால், கருணாநிதியின் அதர்மத்தை அழிக்க வேண்டும்.

திசை திருப்புகிறார் கருணாநிதி

ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றிக்கேட்டால் கடந்த ஆட்சியில் நீங்கள் செய்யவில்லையா என கேட்டு திசை திருப்புகிறார். கடந்த, 1967ல் காங்., கட்சிக்கு எதிராக ஏழைகள் அனைவரும் தேர்தலில் நிற்க வேண்டும் என அண்ணாதுரை வாய்ப்பளித்தார். இப்போது பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே தி.மு.க., வில் தேர்தலில் "சீட்' தரப்படும் அவலம் உள்ளது.

நான் ஆறாவது முறையாக முதல்வராக வேண்டும் அதனால், எனது சொந்த ஊரான திருவாரூரில் போட்டியிடுவதாக கருணாநிதி கூறுகிறார். இத்தனை ஆண்டுகள் திருவாரூர் தெரியவில்லையா? கருணாநிதி இருக்கும் வரை ஏழைகள் தொடருவார்கள். அவர்களின் முன்னேற்றத்திற்கு எந்த நன்மையும் அவர் செய்யமாட்டார். காங்., கட்சிக்கு 63 சீட் கொடுக்க முடியாது என்று கூறிய கருணாநிதி, அதன்பின் எப்படி ஒதுக்கினர். தன்னை கைது செய்துவிடுவார்களோ என்ற பயம் தான் காரணம், என்றார் விஜயகாந்த்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
DMDK leader Vijayakanth has launched his poll campaign from Thirukovilur. He said, for the sake people's welfare I have forged alliance with ADMK. I will work hard to oust DMK rule from Tamil Nadu.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more