அநாகரீகமாக நடந்து கொள்ளும் விஜயகாந்த் ஒரு ஜானி வாக்கர்-சு.சாமி
Subscribe to Oneindia Tamil
ஊட்டி: பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்கிறார் விஜயகாந்த். அவர் ஒரு ஜானிவாக்கர் என்று கூறியுள்ளார் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி.
தமிழகத்தில் ஒரு சதவீத வாக்கு கூட இல்லாத அரசியல் கட்சியை நடத்தி வரும் தலைவர் சுப்பிரமணியசாமி. இவரது கட்சியும் இந்த முறை தேர்தலில் போட்டியிடுகிறது.
இவர் ஊட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் விஜயகாந்த்தை கடுமையாக சாடினார்.
சாமி கூறுகையில், விஜயகாந்த் பேசுவது யாருக்கும் புரியவில்லை. குடிக்காவிட்டால் அவரால் பேச முடியாது. அவர் ஒரு ஜானிவாக்கர்.
பொது இடங்களில் அவர் அநாகரீகமாக நடந்து கொள்கிறார். அவருக்குப் பேசாமல் முரசு சின்னத்திற்குப் பதில் பாட்டில் சின்னத்தைக் கொடுத்திருக்கலாம். அதை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் சாமி.











Click it and Unblock the Notifications