For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வயதாகிவிட்ட இலங்கை பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும்: ராஜபக்சே நண்பர் உதயா கம்மன்பிலா

By Siva
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை பிரதமர் ஜெயரத்னேவுக்கு வயதாகிவிட்டதால் அவர் உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அதிபர் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பரும், மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பிலா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறி்த்து உதயா கம்மன்பிலா கூறியுள்ளதாக தமி்ழ் இணையதளங்களில் வெளியான செய்தி,

முதுமையை எட்டியுள்ள பிரதமரால் தனது கடமைகளை சரிவர செய்ய முடியவில்லை. ஓய்வெடுக்கும் வயதில் பெரிய பதவியில் இருப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்று அதில் கூறப்பட்டிருந்தது.

அதிபர் ராஜபக்சேவின் இலங்கை சுதந்திரக் கட்சியின் கூட்டணிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரே இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே மாகாணசபை உறுப்பினர்களின் கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்று இலங்கை பிரதமர் அலுவலம் தெரிவித்துள்ளதாகவும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

English summary
Sri Lankan president Mahinda Rajapakse's close friend cum minister Udaya Gammanpila has told that PM DM Jayaratne should resign his post as he couldn't do justice to that position due to old age. Tamil websites in Sri Lanka have published this news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X