பின்லேடனுடன் 2 மகன்கள், 2 மனைவிகளும் பலி?-நேரடியாக சண்டை போட்ட லேடன்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொல்லப்பட்ட பின்லேடனுடன் சேர்த்து அவரது இரண்டு மகன்கள், 2 மனைவிகளும் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்கப் படைகளுடன் நேரடியாக பின்லேடனே சண்டை போட்டதாக அமெரிக்க உளவுத்தகவல்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும் மகன்கள் கொல்லப்பட் தகவல் மட்டும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதேசமயம், மனைவியர் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படவில்லை.
அப்போத்தாபாத் என்ற இடத்தில் தங்கியிருந்த பின்லேடனை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வளைத்த அமெரிக்க விசேஷப் படையினர் சரமாரியாக சுட்டு வீழ்த்தினர்.
இந்த சம்பவத்தில் பின்லேடன் கொல்லப்பட்டதை மட்டும் இதுவரை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
இருப்பினும் லேடனின் இரு மகன்கள், 2 மனைவிகளும் கொல்லப்பட்டதாக பாகி்ஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேரடியாக சண்டை போட்ட லேடன்:
இந்த மோதல் குறித்து சுவாரஸ்யமான ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. அது தன்னை சரமாரியாக தாக்கிய அமெரிக்கப் படையினருடன் துப்பாக்கி ஏந்தி லேடனே நேரடியாக சண்டை போட்டார் என்பதுதான்.
லேடன் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் நடமாடவே முடியாத நிலை. சர்க்கரை வியாதி அதிகரித்து விட்டது என்றெல்லாம் சில காலத்திற்கு முன்பு வரை செய்திகள் வந்து கொண்டிருந்தன என்பது நினைவிருக்கலாம்.
ஆனால் அமெரிக்கப் படையினர் லேடன் பதுங்கியிருந்த இடத்தை முற்றுகையிட்டுத் தாக்கியபோது படு துணிச்சலாக துப்பாக்கி ஏந்தி நேரடியாக சண்டை போட்டுள்ளார் லேடன். அப்போதுதான் அவர் துப்பாக்கியால் சல்லடை போல துளைக்கப்பட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்.
பக்ராம் விமான தளத்தில் லேடன் உடல்:
கொல்லப்பட்ட பின்லேடன் உள்ளிட்டோரின் உடல்கள் பக்ராம் விமான தளத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அங்கு பத்திரிக்கையாளர்களை அனுமதிப்பது குறித்து அமெரிக்கா யோசித்து வருகிறது. விரைவில் பத்திரிக்கையாளர்களை அனுப்பி பின்லேடன் உடலைப் பார்வையிட அமெரிக்க ராணுவம் அனுமதிக்கும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, கொல்லப்பட்ட பின்லேடனின் முகம் மட்டும் புகைப்படமாக அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டுள்ளது. அதில் முகம் சல்லடையாக துளைக்கப்பட்டிருப்பது தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications