பாகிஸ்தானில் 6 அல் கொய்தா மூத்த தலைவர்கள்: அமெரிக்க அதிகாரி தகவல்
வாஷிங்டன்: குறைந்தது 6 அல்கொய்தா தலைவர்களாவது பாகிஸ்தானில் இருக்கிறார்கள் என்று அமெரிக்க சட்ட நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உளவுத்துறை குழுவின் தலைவர் மைக் ராஜர்ஸ் கூறியதாவது,
அல் கொய்தாவின் 20 மூத்த தலைவர்களில் குறைந்தது 6 பேராவது பாகிஸ்தானில் தான் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். ஒசாமா பின் லேடன் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் அருகில் எவ்வாறு தங்கியிருந்தார் என்று அந்நாட்டிடம் அமெரிக்க சட்ட நிபணர்கள் கேள்வி எழுப்பவுள்ளனர். இது பற்றி அந்நாட்டுக்கு தெரியுமா, தெரியாதா என்று யூகிக்க விரும்பவில்லை.
ஆனால் நிச்சயமாக இந்த கேள்வியைக் கேட்கவிருக்கிறோம். இந்த உண்மையைத் தெரிந்து கொள்ளும் உரிமை அமெரிக்கர்களுக்கு உண்டு. பாகிஸ்தானுக்கு என்ன தெரியும் என்பது பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.
அப்போடாபாத்தில் வைத்து நேற்று ஒசாமாவை அமெரிக்கப்படைகள் சுட்டுக் கொன்றன.












Click it and Unblock the Notifications