பின்லேடன் படங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும்-சிஐஏ

பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அமெரிக்கா வைத்துள்ளது. மேலும் பின்லேடன் கொல்லப்பட்ட காட்சிகளை நேரடியாக அதிபர் ஒபாமா உள்ளிட்டோர் வீடியோ மூலம் பார்த்தும் உள்ளனர்.
ஆனால் பின்லேடன் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படத்தையோ அல்லது வீடியோ காட்சிகளையே அமெரிக்கா வெளியிடாமல் உள்ளது. இதனால் பல்வேறு சர்ச்சைகள், சந்தேகங்கள் எழுந்துள்ளன.
பின்லேடன் கொல்லப்பட்டது உண்மையாக இருந்தாலும் கூட இவற்றை ஏன் அமெரிக்கா வெளியிட மறுக்கிறது என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. அதேசமயம், இவை பார்க்க மிகவும் குரூரமாக, கோரமாக இருக்கும் என்பதால் வெளியிட்டால் பிரச்சினை வரும் என்று அமெரிக்கா காரணம் கூறியுள்ளது.
இந்த நிலையில் இப்படங்களை உலக மக்கள் பார்க்க வேண்டும், அது முக்கியம் என்று சிஐஏ இயக்குநர் பெனிட்டா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உலகம் அல் கொய்தா தலைவர் பின்லேடனின் உடலைப் பார்க்க வேண்டும். அதற்கான வாய்ப்பை அமெரிக்கா ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அவசியம்.
இது முக்கியமானது என்று கருதுகிறேன். எனவே இதை வெளியிட வேண்டியதும் அவசியமாகிறது. நிச்சயம் இப்படங்களை அமெரிக்கா வெளியிடும் என்பதில் சந்தேகம் இல்லை. அது எப்போது என்பதுதான் தெரியவில்லை. அதுகுறித்து முடிவெடுக்க வேண்டியது வெள்ளை மாளிகைதான் என்றார்.
எத்தனை படங்கள்?
பின்லேடன் கொலை தொடர்பாக மூன்று செட் படங்களை அமெரிக்கா வைத்துள்ளதாக பெயர் குறிப்படி விரும்பாத வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் மொத்தம் எத்தனை படங்கள் உள்ளன என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
முதல் செட் படத்தில், பின்லேடனின் உடல் முழுமையாக புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு பின்லேடன் கொண்டு செல்லப்பட்ட பின்னர் எடுக்கப்பட்ட படம் இது என்று தெரிகிறது.
இன்னொரு படத்தில் மிகவும் சிதைந்த நிலையில் உள்ள பின்லேடனின் முகம் காணப்படுகிறதாம். இதில் துப்பாக்கிக் குண்டுகள் பின்லேடனின் தலையை பிளந்து சென்றதால் தலையில் ஏற்பட்ட பெரும் ஓட்டை மற்றும் வெளியில் தெரித்து விழுந்த கண்களுடன் பார்க்கவே கோரமாக காணப்படுகிறதாம்.
இன்னொரு புகைப்படத்தில், பின்லேடன் வீட்டிற்குள் அமெரிக்கப் படையினர் நுழைந்து தாக்குதல் நடத்தியது உள்ளது. அதேபோல பின்லேடன் உடலை கடலில் புதைத்ததையும் புகைப்படம் எடுத்துள்ளதாம் அமெரிக்கா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications