குமரியில் ராஜீவ் காந்தி முழு உருவ சிலையை திறந்து வைக்கும் ராகுல்
Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி பழைய பேருந்து நிலைய சந்திப்பு ரவுண்டானா அருகில் உள்ளது அரசு விருந்தினர் மாளிகை வளாகம். இந்த வளாகம் முன்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 9 அடி உயர முழு உருவ வெண்கல சிலை ரூ. 10 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளது.
இந்த சிலையை சென்னை சிற்பி தீனதயாளன் வடிவமைத்து வருகிறார் என்றும், சிலை வரும் 28-ம் தேதி சென்னையில் இருந்து கண்டெய்னர் லாரி மூலம் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்படும் என்றும், சிலை அமைக்கும் பணி 2 மாதத்தில் நிறைவடையும் என்றும் கூறப்படுகின்றது.
இந்த சிலையை வரும் ஜுலை மாதம் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி திறந்து வைக்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை காந்தி-காமராஜ்-ராஜீவ் தேசிய அறக்கட்டளை ஏற்பாடு செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications