For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கனிமொழி ஜாமீன் மனு-சிபிஐக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

By Shankar
Google Oneindia Tamil News

Kanimozhi
டெல்லி: கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி எம்பி, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.

தன் மனுவில், "என் மீதான குற்றச்சாட்டுக்கள் தவறானவை கலைஞர் டி.வி.யில் நான் வெறும் பங்குதாரர்தான். வேறு எந்த செயல்பாட்டுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை.

எனக்கு சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் மறுத்தது சரியல்ல. பணபரிவர்த்தனையில் நான் பலன் பெறவில்லை. எனக்கு பள்ளி செல்லும் வயதில் மகன் உள்ளான். அவனை நான்தான் கவனிக்க வேண்டும். எனவே மனிதாபிமான அடிப்படையில் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று கனிமொழியின் ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பிறகு இந்த விசாரணையை வரும் 30ம் தேதிக்கு நீதிபதி அஜீத் பரிஹோகி ஒத்தி வைத்தார்.

கனிமொழி மனு மீது உரிய பதில் அளிக்க சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார். கனிமொழியிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் முழுவதையும் 30ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்ட காரணத்தால் கனிமொழி இன்னும் ஒரு வாரம் திகார் ஜெயிலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கனிமொழி போலவே, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் நேற்று ஜாமீன் கோரி மனு செய்திருந்தார். அவரது மனுவும் இன்று விசாரணைக்கு வந்தது. அந்த மனு மீதான விசாரணையும் வரும் 30ம் தேதிக்கு நீதிபதி அஜீத் ஒத்தி வைத்துள்ளார்.

சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கரீம் மொரானி ஆஜர்:

இந் நிலையில் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி வழங்கியதாக
சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ள, மும்பை சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி கரீம் மொரானி உடல் நலக்குறைவு காரணமாக இவர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று அவர் டெல்லி சென்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை 26ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்துள்ளார்.

English summary
The Delhi high court on Tuesday issued notice to the CBI on the bail pleas of DMK MP Kanimozhi and Kalaignar TV MD Sharad Kumar in the 2G spectrum case. "Issue notice to the CBI for May 30," justice Ajit Bharihoke, who on Monday dismissed the bail pleas of five corporate honchos in the case. The court also asked the probe agency to file a status report detailing the stage of investigation and the judicial proceedings in the case on the next date of hearing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X