தமிழக காங். தலைவர் சுதர்சன நாச்சியப்பன்?
டெல்லி: தமிழக காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவராக சுதர்சன நாச்சியப்பன் அல்லது கார்வேந்தன் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படக் கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன.
தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மரண அடியைக் கொடுத்தனர் தமிழக மக்கள். 63 தொகுதிகளை திமுகவிடமிருந்து கட்டாயப்படுத்தி வாங்கி போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது. மற்ற தொகுதிகளில் மகா கேவலமாக மண்ணைக் கவ்வியது.
அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் மயிலாப்பூர் தொகுதியில் வேட்பாளர் தேர்வில் மெகா குழப்பம் செய்து கடைசியில் தானே போட்டியிட்ட தங்கபாலு கேவலமாக தோற்றார்.
தேர்தல் தோல்விக்குப் பின்னர் மே 14ம் தேதியன்று கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்து கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பினார்.
இந்த நிலையில், கட்சியின் புதிய மாநிலத் தலைவரை இன்று காங்கிரஸ் மேலிடம் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் எம்.பி. கார்வேந்தன் அல்லது மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரில் ஒருவருக்கு தலைவர் பதவி கிடைக்கும் என்று தெரிகிறது.
இவர்களில் கார்வேந்தன் ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்தவராவார். சுதர்சன நாச்சியப்பன் தனி ஆவர்த்தனம் செய்து வருபவர்.
இன்று மாலைக்குள் புதிய தலைவர் நியமன செய்தி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications