வில்லியமின் மைத்துனியுடன் தம்பி ஹாரி காதல்?

சார்லஸ்-டயானா தம்பதிக்கு 2 மகன்கள். மூத்தவர் வில்லியம், இளையவர் ஹாரி. இவர்களில் வில்லியமுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. தனது காதலி கேத்தரின் மிடில்டலனை மணந்து கொண்டார் வில்லியம். கேத்ரீனாவி்ன் தங்கை பிப்பா மிடில்டன். தற்போது பிப்பாவுக்கும், வில்லியமின் தம்பி ஹாரிக்கும் இடையே காதல் பூத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இருவரும் லண்டன் செல்சியா பகுதியில் உள்ள தி டிரபடோர் என்ற பப்புக்கு ரகசியமாக டேட்டிங் போனதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இருவரும் அடிக்கடி பப்புகளுக்குப் போவதாகவும், சேர்ந்து சாப்பிடுவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஹாரியையும், பிப்பாவையும் சேர்த்துப் பார்த்த ஒருவர் கூறுகையில், கடந்த வாரம்தான் இருவரையும் சேர்த்துப் பார்த்தேன். இருவரும் மதிய வேளையில் வந்தனர். ஒன்றாக அமர்ந்தனர். டீ மற்றும் கேக்குளைச் சாப்பிட்டனர்.
இங்கு ஹாரி அடிக்கடி வருவது வழக்கம். பெரும்பாலும் தனியாகத்தான் வருவார். அமைதியாக பீர் சாப்பிடுவார். ஆனால் கடந்த வாரம் அவர் பிப்பாவுடன் வந்தார்.
அவர்களை முதலில் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இருப்பினும் பின்னர் அவர்களைக் கண்டு கொள்ளாமல் அவரவர் வேலையில் மூழ்கி விட்டனர் என்றார்.
பிப்பாவுக்கு 27 வயதாகிறது. பிப்பாவுக்கு ஏற்கனவே ஒரு காதலர் இருந்தார். அவரது பெயர் அலெக்ஸ் லெளடன். ஆறு மாதங்களுக்கு முன்புதான் லெளடனை விட்டுப் பிரிந்தார் பிப்பா.
இந்த நிலையில் ஹாரியுடன் அவர் சேர்ந்து சுற்றுவதாக வந்துள்ள தகவலால் ஹாரிக்கும், பிப்பாவுக்கும் இடையே காதல் பூத்துள்ளதாக செய்திகள் பரவ ஆரம்மபித்துள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications