For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பள்ளிகள் திறந்த ஒரு வாரத்திற்குள் 4 மாணவர்கள் தற்கொலை: கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: கோடை விடைமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனால் கல்வி அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக நாட்கள் கோடை விடுமுறை விடப்பட்டது. கடந்த 15-ம் தேதி தான் அனைத்து பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்து ஒரு வார காலத்திற்குள் சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மாணவியும், மாணவரும் தற்கொலை செய்து கொண்டனர். இதேபோன்று தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த கொண்டலாம்பட்டி அருகே உள்ள எஸ்.நாட்டாமங்கலத்தை சேர்ந்த ஜீவானந்தம் (15), பனமரத்துப்பட்டி பள்ளி பிளஸ்-2 மாணவர் சீனிவாசன் ஆகியோரும் தற்கொலை செய்து கொண்டனர்.

பள்ளிகள் திறந்து ஒரு வாரத்திற்குள் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதால் கல்வி அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பெற்றோர்களும் பீதி அடைந்துள்ளனர்.

English summary
Four students of Salem and Namakkal districts have committed suicide within a week after the re-opening of schools. These incidents have left the educational officials in a state of shock.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X