For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து குழு அமைத்து 'ஆராயச்சி' செய்யும் காங்கிரஸ்

By Chakra
Google Oneindia Tamil News

Thangabalu
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் பிறந்தநாள், கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. விழாவில் பேசிய தங்கபாலு,

தற்போதைய நிலையில் பிரதமர் பொறுப்பேற்க ராகுல் விரும்பவில்லை. ஆனால், வருங்காலத்தில் அவர் தலைமையில் அணி திரள, நாங்கள் தயாராக இருக்கிறோம். தற்பொழுது காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சியில் உள்ள எட்டு மாநிலங்களே அவரது தகுதி, திறமைக்கு சான்று. அவருடைய உழைப்பால் தான் இத்தகைய வெற்றியை பெற முடிந்தது.

தமிழக சட்டசபை தேர்தலில், காங்கிரக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கைக்கு பின்னரே, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

கேள்வி: பிரதமர் ஆகும் தகுதி ராகுல்காந்திக்கு இல்லை என்று பாரதீய ஜனதா கட்சி கூறியுள்ளதே?.

பதில்: இந்தியாவில் பிறந்த யாராலும் பிரதமராக முடியும். ராகுல்காந்தி இளையவராக இருக்கலாம். ஆனால், ஆற்றலுடன் செயல்படும் திறமை உடையவர். இன்று நினைத்தால் கூட அவரால்
பிரதமராக முடியும். அவரை குறை சொல்லும் தகுதி பாரதீய ஜனதா கட்சிக்கு இல்லை.

கேள்வி: உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்று தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சி தலைவர் யுவராஜ் கூறியுள்ளாரே?.

பதில்: கூட்டணி பற்றி முடிவு செய்பவர் சோனியாகாந்திதான். அது பற்றி பேச இளைஞர் காங்கிரசுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்றார்.

பிரதமர் ஆகும் தகுதி ராகுல் காந்திக்கு இல்லை என்று பாஜக கூறியுள்ளதே? என்று கேட்டதற்கு, இந்தியாவில் பிறந்த யாராலும் பிரதமராக முடியும். ராகுல் காந்தி இளையவராக இருக்கலாம். ஆனால், ஆற்றலுடன் செயல்படும் திறமை உடையவர். இன்று நினைத்தால் கூட அவரால் பிரதமராக முடியும். அவரை குறை சொல்லும் தகுதி பாஜகவுக்கு இல்லை என்றார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்று தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சி தலைவர் யுவராஜ் கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, கூட்டணி பற்றி முடிவு செய்பவர் சோனியா காந்திதான். அது பற்றி பேச இளைஞர் காங்கிரசுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்றார் தங்கபாலு.

English summary
Congress has formed a team to analyse the TN assembly election defeat, said TNCC chief Thangabalu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X