நெல்சன் மண்டேலாவைச் சந்தித்தார் மிஷல் ஒபாமா

ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் மிஷல் ஒபாமா ஈடுபட்டுள்ளார். அவர் தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்தப் பயணத்தின் ஒரு கட்டமாக ஜோஹன்னஸ்பர்க் நகருக்கு வந்த மிஷல் அங்கு நெல்சன் மண்டேலாவை தனது இரு மகள்களுடனும் போய் பார்த்து நலம் விசாரித்துப் பேசினார்.
92 வயதாகும் மண்டேலாவைப் பார்த்துப் பேசிய மிஷல் தனது இரு மகள்களையும் அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட புகைப்படத்தில் மண்டேலாவுக்கு அருகில் தனது இரு மகள்களுடனும் மிஷல் அமர்ந்திருப்பதாக உள்ளது.
மிஷல் மற்றும் அவரது மகள்கள் தவிர மிஷலின் தாயார் மரியன் ராபின்சனும் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் மண்டேலாவை சந்திக்கும் திட்டம் மிஷலிடம் இல்லையாம். கடைசி நேரத்தில்தான் மண்டேலாவை சந்திக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சந்திப்பு நடந்துள்ளது.
மண்டேலாவை இப்போதுதான் தனது வாழ்க்கையிலேயே முதல் முறையாக சந்திக்கிறாராம் மிஷல்.
கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. மண்டேலாவுடன் அவரது மனைவி கிரேக்கா மேச்சலும் உடன் இருந்தார். இவர் மொசாம்பிக் நாட்டின் முன்னாள் அதிபரின் முதல் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இது அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி இல்லை என்றும், மிஷலின் சொந்தப் பயணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1999ம் ஆண்டு அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற மண்டேலா அதன் பின்னர் முழு ஓய்வில் இருந்து வருகிறார். அவரது உடல் நலம் சரியாக இல்லை. பொது நிகழ்ச்சிகளுக்கு அவர் பெரும்பாலும் வருவதில்லை. இருப்பினும் மிஷல் தன்னை சந்திக்க விரும்பியதால் சற்று உற்சாகத்துடன் மண்டேலா காணப்பட்டார். மிஷலும், மண்டேலாவைக் கண்டதால் பெரும் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைந்தார் என்று சந்திப்பின்போது உடன் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications